மேலும் 10 செய்தியாளர்களுக்கு கொரோனா: சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக நேற்று மட்டும் தமிழகத்தில் 76 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் இதனை அடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 1596 ஆக உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 76 பேர்கள் 26 பேர் செய்தியாளர்கள் என்பதும் அவர்கள் அனைவரும் ஒரே செய்தி நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் என்பதும் அதிர்ச்சியான தகவல் ஆகும். கொரோனா குறித்த செய்திகளை சேகரிக்க செல்லும் செய்தியாளர்களுக்கும் கொரோனா வைரஸ் பரவி வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது 

இந்த நிலையில் சென்னையில் இன்று புதிதாக மேலும் 10 செய்தியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது செய்தியாளர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து செய்தியாளர்கள் மிகவும் கவனத்துடன் செய்தி சேகரிக்க வேண்டும் என்றும், சமூக விலகலை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும், பெரும்பாலும் செய்தியாளர் சந்திப்பை அரசியல்வாதிகள் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது

More News

கொரோனா வைரஸ் தயாரிக்கப்பட்டதல்ல!!! WHO கருத்து!!!!

கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து உலகம் முழுவதும் பல்வேறு முரண்பட்ட கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

'என் ஜெயமோகன்': 'கரு பழனியப்பனுக்கு பதிலடி தருகிறாரா கமல்ஹாசன்!

நடிகரும் இயக்குனருமான கரு பழனியப்பன் நேற்று தனது சமூக வலைத்தளத்தில் எழுத்தாளரும் திரைக்கதை, வசனகர்த்தாவுமான ஜெயமோகன் குறித்து ஒரு சர்ச்சைக்குரிய டுவிட்டை பதிவு செய்திருந்தார்.

வெளிநாட்டினர் அமெரிக்காவில் குடியேற தடை: உத்தரவு பிறப்பித்த டிரம்ப்

உலகிலேயே மிக மோசமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா, கொரோனா தாக்கம் காரணமாக ஏராளமான வேலையிழப்புகளையும் பொருளாதார சிக்கலையும் சந்தித்து வருகிறது.

அமலாபால் டுவிட்டுக்கு அசத்தலான பதில் கூறிய விஷ்ணுவிஷால்

நடிகர் விஷ்ணுவிஷாலும் அமலாபாலும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்யவிருப்பதாகவும் கோலிவுட்டில் ஒரு வதந்தி பரவி பின்னர் இருதரப்பினர் தந்த விளக்கத்தால் அந்த வதந்தி முடிவுக்கு வந்தது

ஜியோ பங்குகளை பல்லாயிரம் கோடிக்கு வாங்கிய ஃபேஸ்புக்!

இந்தியாவின் நம்பர் ஒன் நிறுவனமான ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ பங்குகளை உலகின் முன்னணி சமூக வலைதள நிறுவனமான பேஸ்புக் வாங்கி உள்ளது. ஜியோவின் 9.9 சதவீத பங்குகளை