தமிழகத்தில் 40 லட்சத்து 63 ஆயிரத்தைத் தாண்டிய கொரோனா பரிசோதனைகள்!!! மாநில அரசின் அதிரடி!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய அளவில் தமிழகத்தில் அதிகக் கொரோனா பரிசோதனைகள் நடத்தப்படுகிறது எனத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமருடனான ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை தமிழகத்தில் 40 லட்சத்து 63 ஆயிரத்து 623 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு இருக்கின்றன எனத் தமிழகச் சுகாதாரத்துறை தகவல் தெரிவித்து இருக்கிறது. மேலும் தமிழகத்தில் புதிதாக 67 ஆயிரத்து 980 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டதாகவும் அதில் 5,967 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது எனவும் தமிழகச் சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறது.
புதிதாக கொரோனா உறுதிச் செய்யப்பட்ட 5,967 பேரில் ஆண்கள்-3,611, பெண்கள்-2,356 என்பதும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 97 பேர் கொரோனாவால் உயிரிழந்து இருக்கின்றனர் என்றும் தமிழகச் சுகாதாரத்துறை தெரிவிக்கிறது. இதனால் ஒட்டுமொத்த கொரோனா பலி எண்ணிக்கை தமிழகத்தில் 6,614 ஆக உயர்ந்து இருக்கிறது. இதுவரை ஒட்டுமொத்த தமிழகத்தில் 3,85,352 பேருக்கு கொரோனா உறுதிச் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 3.25 ஆகவும் உயர்ந்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னையில் நேற்று புதிதாக 1,278 பேருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது. சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் 4,689 பேருக்கும் கொரோனா உறுதிச் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் ஒட்டுமொத்த தமிழகத்தில் 53,282 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இன்று 6,127 பேர் மருத்துவமனைகளில் இருந்து முற்றிலும் வீடு திரும்பியுள்ளனர் என்ற தகவலும் கிடைத்துள்ளது. மேலும் வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் தமிழகத்துக்கு வந்த 896 பேர், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் தமிழகத்துக்கு வந்த 779 பேர், ரயில்கள் மூலம் தமிழகத்துக்கு வந்த 428 பேர், சாலை மார்க்கமாக தமிழகத்துக்கு வந்த 3,987 பேர், கடல் மார்க்கமாக தமிழகத்துக்கு வந்த 34 பேர் என மொத்தம் 6 ஆயிரத்து 124 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர் என்றும் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com