வாயில் ஊறும் எச்சிலை வைத்து கொரோனா பரிசோதனை!!! புது முயற்சியில் இறங்கிய விஞ்ஞானிகள்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா பரிசோதனைக்கு மாதிரிகள் சேகரிக்கும் பணி இதுவரை கடினமாகவே இருந்து வருகிறது. மூக்கு, தொண்டைக்குழி போன்றவற்றில் படிந்து இருக்கும் சளி மாதிரியை பஞ்சில் சுற்றப்பட்ட குச்சிகளில் சேகரித்து வைப்பது வழக்கம். ஆனால் சிலருக்கு மூக்கு, தொண்டை குழி போன்றவற்றில் சளி மாதிரிகள் இல்லாமல் போகும்போது சிக்கல் ஏற்படுகிறது. மேலும் சிலருக்கு மூக்கு மற்றும் வாய் பகுதிகளில் குச்சியை விட்டு குடையும்போது ஒவ்வாமை ஏற்படவும் செய்கிறது. இந்த ஒவ்வாமையால் சிலர் வாந்தி எடுக்கவும் செய்கின்றனர். இந்தப் பிரச்சனையைத் தவிர்ப்பதற்காக முன்னமே அமெரிக்க விஞ்ஞானிகள் வாயில் ஊறும் எச்சிலை வைத்து கொரோனா பரிசோதனை செய்யும் முயற்சியில் இறங்கினர். இதில் வெற்றிகரமாக சோதனை முடிவுகள் வருவதாகவும் அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர்.
கொரோனா அறிகுறிகள் இருப்பவர்கள் அல்லது அறிகுறிகள் எதுவுமே இல்லாத நிலையிலும் கொரோனா பரிசோதனைக்கு இந்த முறை மிகவும் எளிதாக இருப்பதாகக் கூறப்படுகிறது. பரிசோதனை செய்ய வருபவர் ஒரு ஒரு சிறு கிண்ணத்தில் எச்சிலைத் துப்பி அதைப் பரிசோதனை செய்யும் அதிகாரிகளுக்கு கொடுத்தால் மட்டும் போதும். அதை சோதனைக்கு எடுத்துக் கொண்டு கொரோனா நோய்த்தொற்று இருக்கிறதா? இல்லையா? என்பதை அவர்கள் மிக விரைவாக உறுதி செய்து விட முடியும். அமெரிக்காவைத் தொடர்ந்து தற்போது பிரிட்டன் விஞ்ஞானிகளும் இந்த வழிமுறையை கையாளத் தொடங்கி இருக்கின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com