கொரோனா: நேரத்தைப் பயனுள்ளதாக்க குடும்பத்தோடு மண்டலா ஓவியம் வரைந்து மகிழுங்கள்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக உலகம் முழுவதுமே முடங்கி கிடக்கிறது. இந்த நேரத்தை உங்கள் வீட்டுக்குள் இருந்துதான் செலவழித்தாக வேண்டும்? வீட்டுக்குள் இருந்துகொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் பெரும்பாலான நேரத்தைத் தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தளங்களில் செலவழித்து வருபவரா நீங்கள்? அப்படியெனில் இது கண்டிப்பாக உங்களுக்கு உதவும். வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் இந்த ஓவியத்தை வரையலாம். இந்தவகை ஓவியத்தை வரைவதற்கு பெரிய ஞானம் எல்லாம் தேவைப்படுவதில்லை. எளிமையான வண்ணங்களைக் கொண்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்தவகை ஓவியங்களை வரைய முடியும்.
குடும்பத்தோடு ஓவியம் வரையலாம்
ஓவியம் என்றாலே அது தனியாக இருந்து நுணுக்கமான அறிவோடு வரைவது. அதென்ன குடும்பத்தோடு வரையும் ஓவியம்? மண்டலா வகை ஓவியங்கள் எந்த ஒரு புள்ளியில் இருந்து ஆரம்பித்தாலும் தொடர்வண்டிபோல நீண்டுக் கொண்டே செல்லும் தன்மையுடையது. ஒரு புள்ளியை ஆரம்பித்து அதை பலர் சேர்ந்து கூட முடிக்கலாம். நுணுக்கமான அறிவும் தேவைப்படாது. எளிமையாக ஒருவர் வரைந்ததைப் பார்த்து பக்கத்தில் இருந்துக்கொண்டே இன்னொருவர் வரையலாம். ஓவியத்தின் மாதிரிகளை இணையத்தில் எடுத்து வைத்துக்கொண்டு குடும்பத்தோடு சேர்ந்து இந்தவகை ஓவியங்களை வரைந்து நேரத்தைப் பயனுள்ளதாக மாற்றமுடியும்.
உங்கள் வீடுகளில் உள்ள பாழடைந்த சுவர், கழிப்பறை, சமையலறை, பூஜை அறை, தாழ்வாரம், வீட்டின் முகப்பு என்று எங்கு வேண்டுமானாலும் இந்த ஓவியத்தை வரைந்து அழகுப்படுத்தலாம். அல்லது பெரிய பெரிய தாள்களை எடுத்துக்கொண்டு அதில் வரைந்து பின்னர் அதை பயன்படுத்தும் வகையிலும் இந்த ஓவியத்தை வரையலாம். மேலும் குழந்தைகளோடு சேர்ந்து ஓவியத்தை வரையும்போது ஒரு கூட்டுணர்வு ஏற்படும். ஓவியத்தில் ஆர்வம் இல்லாதவர்கள் கூட இதன் எளிமையான அம்சத்தால் ஆர்வத்தோடு பங்கு கொள்ள இந்த ஓவியங்கள் துணைபுரியும்.
வீட்டில் உள்ள பெரும்பாலான குழந்தைகள் செல்போனில் நேரத்தைச் செலவிடுகின்றனர். இப்படி குழந்தைகளோடு சேர்ந்து ஓவியத்தை வரையும்போது அவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்துவதோடு ஒரு கூட்டாண புரிந்துணர்வை அவர்களிடம் ஏற்படுத்த முடியும். கொரோனா குடும்பங்களை ஒன்றாக இணைத்திருக்கும் வேளையில் வீட்டில் இருக்கும் நேரத்தை குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என குடும்பமும் பயனுள்ளதாக மாற்றுவோம்!!!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout