கொரோனா: நில்லுன்னு சொன்னா நிக்குமா??? குட்டி அஸ்வந்த்தின் வைரல் வீடியோ!!!

  • IndiaGlitz, [Wednesday,March 18 2020]


கொரோனா பாதுகாப்பு குறித்து உலகத் தலைவர்கள் முதற்கொண்டு அனைவரும் விழிப்புணர்வு கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் குழந்தை நட்சத்திரமான நடிகர் அஸ்வந்த் கொரோனா பற்றி ஒரு விழிப்புணர்வு வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். 

அதில், “கொரோனா பற்றி யாரும் பயப்படத் தேவையில்லை, ஒவ்வொரு தட்ப வெட்ப நிலைக்கும் ஏதாவது வைரஸ் பரவுவது இயல்பு, அதுக்குறித்து பயப்படாமல் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மட்டும் மேற்கொள்ளுங்கள்...“ என்று தன்னுடைய அழகான குழந்தை மொழியில் தெரிவித்து இருக்கிறார். இந்த வைரல் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

குழந்தை நட்சத்திரமாக சின்னத் திரையில் கலக்கி வந்த அஸ்வந்த் தற்போது வெள்ளித்திரையிலும் பிரபலமாகி வருகிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது. சூப்பர் டீலக்ஸ், சுந்தர காண்டம் படத்தில் தனது துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தி பலரது பாராட்டை பெற்றவர் தற்போது வெளியிட்டுள்ள கொரோனா விழிப்புணர்வு வீடியோவால் நெட்டிசன்களின் பாராட்டுக்களையும் குவித்து வருகிறார். 

More News

அரண்மனை கிளி தொடரில் இருந்து விலகினார் நீலிமாராணி..!

வாழ்க்கை பல மாற்றங்களினை கோருகிறது. ஆச்சரியத்துடன் அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். போய் வா துர்கா.. நீங்கள் தான் என் பலம் எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்

இப்ப இல்லைன்னா எப்பவும் இல்லை: பிரபல இயக்குனரின் கொரோனா டுவீட்

கொரோனா வைரசால் உலகமே பரபரப்பில் இருந்து வரும் நிலையில் அதன் ஆபத்தை உணராமல் ஒரு சிலர் கொரோனா வைரஸ் குறித்து மீம்ஸ் கிரியேட் செய்தும், காமெடி டுவிட்டுக்களை பதிவு செய்தும் வருகின்றனர் 

உடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நித்யா மேனன்... மாஸான புகைப்படங்கள்..!

கொஞ்சம் கூடுதல் எடையுடன் இருந்தார் நித்யா மேனன். தற்போது தனது உடல் எடையை குறைத்து புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.        

கொரோனா பரபரப்பிலும் படப்பிடிப்புக்கு சென்ற முழுமாத கர்ப்பிணி நடிகை

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ராஜா ராணி' என்ற சீரியலில் நடித்த சஞ்சீவ் கார்த்திக் மற்றும் ஆலியா மானசா ஆகிய இருவரும் காதலித்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர் என்பது தெரிந்ததே

கொரோனா விவகாரம் குறித்து ஜிவி பிரகாஷின் பதிவு!

உலகம் முழுவதும் மனித இனத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சாதாரண குடிமக்கள் முதல் நாட்டின் அதிபர் வரை தாக்கி வருகிறது