கொரோனா உயிரிழப்பு: இறுதிச்சடங்கு செய்ய ரூ.15 ஆயிரம் நிதியுதவி!!! கெத்துக் காட்டும் ஒரு மாநிலம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆந்திர மாநிலத்தில் நேற்று கொரோனா பரவல் தடுப்புக்காக முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த குடும்பத்திற்கு தலா ரூ. 15 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என்ற முக்கிய அறிவிப்பை அம்மாநில முதல் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி வெளியிட்டு உள்ளார்.
உலக மக்கள் அனைவரும் கொரோனா பீதியில் இருக்கும்போது அந்தப் பாதிப்பால் உயிரிழப்பவர்களின் நிலைமை அதைவிட கொடுமையாக இருக்கிறது. கொரேனாவால் உயிரிழந்தவர்களின் உடலை அப்புறப்படுத்துவதற்கு உலகச் சுகாதார அமைப்பு பல்வேறு வழிமுறைகளை வழங்கியிருக்கிறது. அந்த நெறிமுறைகளை மாநில அரசுகள் கடைப்பிடிக்குமாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும் வலியுறுத்ததி உள்ளது. ஆனாலும் கொரோனா பாதித்த உடலை அப்புறப்படுத்தும்போது தனக்கும் தொற்று ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தால் சுகாதாரப் பணியாளர்கள் அவமரியாதையுடன் நடந்து கொள்வதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டு வைக்கப் படுகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொரோனாவால் உயிரிழந்த உடலை ஆந்திர மாநிலத்தின் சுகாதாரப் பணியாளர்கள் ஜேசிபி கொண்டு அகற்றியதாகச் செய்திகள் வெளியானது. அதைப்போல இன்னொரு உடல் டிராக்டரை கொண்டு அப்புறப்படுத்தப் பட்டது. இதுகுறித்து தெலுங்கு தேசக் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு கடுமையான விமர்சனத்தை முன்வைத்து இருந்தார். எனவே கொரோனாவால் உயிரிழந்த உடலை அப்புறப்படுத்துவதில் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் முறையான விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் அத்தகையோருக்கு இறுதி சடங்கு செய்ய ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாநில அரசு சார்பாக ரூ. 15 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.
மேலும், தனிமைப்படுத்தும் முகாம்களில் சுகாதாரமான வசதி, தரமான உணவு போன்றவற்றை வழங்குவதற்கு முறையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு சுகாதார அமைச்சரைக் கேட்டுக் கொண்டார். அம்மாநிலத்தில் தனியார் மருத்துவமனைகள் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க மறுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் கடுமையான எச்சரிக்கையை விடுத்து இருக்கிறார். தனிமைப்படுத்தும் முகாம்களில் கால்சென்டர் போன்ற வசதிகளை முறைப் படுத்துமாறும் முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆந்திராவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதற்கு காரணம் நோய் முற்றியப் பின்பே நோயாளிகள் சுகாதார அதிகாரிகளைத் தொடர்பு கொள்கின்றனர். இக்குறைபாட்டைத் தடுக்க பரிசோதனைகளை அதிகப்படுத்துமாறும் சுகாதார அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். மேலும் கொரோனா நோயாளிகளுக்கு செய்யப்படும் பரிசோதனை, சிகிச்சை போன்ற அனைத்துத் தகவல்களையும் நேயாளிகளுக்கு உடனே தெரிவிக்குமாறும் வலியுறுத்தி இருக்கிறார். ஆந்திர மாநிலத்தின் இப்போதைய நிலைமையை பொறுத்தவரை 17 ஆயிரம் மருத்துவர்கள் மற்றும் 12 ஆயிரம் செவிலியர்கள் தேவைப் படுவதாகவும் மருத்துவக் கட்டமைப்பை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதார செயலரை அவர் கேட்டுக் கொண்டதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout