கூடங்குளம், சிஏஏ, கொரோனா விதிமுறை மீறல் வழக்குகள் குறித்து தமிழக முதல்வர் எடுத்த அதிரடி முடிவு!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா பரவல் காலத்தில் விதிமுறைகளை மீறியதாகப் பதிவு செய்யப்பட்ட 10 லட்சம் வழக்குகள் ரத்து செய்யப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர், கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் போடப்பட்ட விதிமுறைகளை மீறியதற்காக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
மத்திய அரசு அறிவுரையின் பேரில் தமிழக அரசு பல்வேறு தடுப்பு கட்டுப்பாடுகளை அறிவித்து இருந்தது. இதையடுத்து போலீசார் மாநிலம் முழுவதும் சோதனை சாவடி அமைத்து வாகன சோதனை செய்தும், ஊரடங்கை அமல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டும் வந்தனர். அப்போது வன்முறையில் ஈடுபட்ட சில குறிப்பிட்ட குற்றங்கள், முறைகேடான வழிகளில் இ-பாஸ் பெற்று பயன்படுத்தியது மற்றும் போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தது போன்ற ஒரு சில வழக்குகளை தவிர மற்ற அனைத்து வழக்குகளும் பொது மக்களின் நலன் கருதி ரத்து செய்யப்படுகிறது எனத் தெரிவித்தார்.
அதேபோல குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்துச் செய்யப்படுகிறது என்றும் இப்போராட்டங்களின்போது தடையை மீறி பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டங்களில் ஈடுபட்டதாகவும் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தற்காகவும் போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தது தவிர்த்து மற்ற வழக்குகள் ரத்து செய்யப்படும் என்றார்.
மேலும் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக நடந்த போராட்டம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவது குறித்து பரிசீலனை செய்து முடிவு செய்யப்படும் என்றும் தமிழக முதல்வர் பொது மக்கள் மத்தியில் தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments