தமிழகத்தில் நாளை முதல் அமலுக்கு வரும் கொரோனா ஊரடங்கு விதிமுறைகள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா பரவலை தடுக்கும் விதமாககத் தமிழக முழுவதும் பல்வேறு கட்டுப்பாட்டு விதிகளை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. அந்த வகையில் தமிழக அரசு விதித்துள்ள இரவு நேர ஊரடங்கினை முன்னிட்டு நாளை (ஏப்ரல் 20) முதல் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் அனைத்தும் பகல் நேரத்தில் மட்டுமே இயக்கப்படும் என மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு கொண்டு வந்துள்ள இரவு நேர ஊரடங்கை தொடர்ந்து இரவு நேரங்களில் வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் போக்குவரத்து சேவையும் இயங்கிட அனுமதி கிடையாது.
பகல் நேரங்களில் இயக்கப்படுகின்ற பேருந்து சேவைகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்தல், கூட்ட நெரிசலைத் தவிர்த்தல் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும்.
சென்னையில் இருந்த பிற ஊர்களுக்கு இயக்கப்படுகின்ற பேருந்துகள் அதிகாலை 4 மணி தொடங்கி இரவு 8 மணிக்குள்ளாக சென்று அடையும் வகையில் ஏற்பாடு செய்யப்படும்.
அரசு விடுமுறையான ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. அதனால் ஞாயிற்றுக் கிழமைகளில் பேருந்துகள் இயங்காது.
விரைவு பேருந்தகளில் பயணிக்க வேண்டி முன்பே பதிவு செய்த வாடிக்கையாளர்கள் பேருந்து நிலையக் கட்டுப்பாட்டு அலுவலகத்தை அணுகி பயணத்திட்டத்தை மாற்றி அமைத்துக் கொள்ளுமாறும் தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் முன்பதிவு கட்டணத்தை திரும்பப்பெறும் வசதியும் செய்யப்பட்டு உள்ளது.
மாநகரப் பேருந்துகளில் நின்று கொண்டு பயணிகள் பயணம் செய்வதற்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு உள்ளது. அந்த விதி தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும். எனவே மாநரக வழித்தடங்களில் அதிகாலை 4 மணி தொடங்கி இரவு 10 மணி வரையிலும் பேருந்துகள் இயக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாளை முதல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்துச் சுற்றுலா தலங்களையும் மூடவும் அப்பகுதிக்குச் சுற்றுலா பயணிகள் வரவும் அரசு தடை விதித்து உள்ளது.
மேலும் கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலாத் தலங்களுக்கும் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல அனைத்து நாட்களிலும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout