கொரோனா உறுதிசெய்யப்பட்ட ஒரே நாளில் உயிரைவிட்ட ஊடகவியலாளர்!!! மனதை உறைய வைத்த சம்பவம்!!!
- IndiaGlitz, [Monday,June 08 2020]
ஹைத்ராபாத்தை மையமாகக் கொண்டு இயங்கிவரும் நியூஸ் சேனல் டிவி5. இதில் குற்றப்பிரிவு ஊடகவியலாளராக பணியாற்றி வரும் மனோஜ்குமார் கொரோனா கண்டறியப்பட்டு ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 30 வயதான மனோஜ் குமார் கொரோனா அறிகுறிகள் தென்பட்டத்தைத் தொடர்ந்து காந்தி மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு இருக்கிறார். கொரோனா சோதனைக்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டு இருக்கிறது. மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கொரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்ட அடுத்த நாளே அவர் நோயின் தீவிரத்தால் உயிரிழந்து இருக்கிறார்.
இந்நிலையில் மனோஜ் குமார் பைலேட்ரல் நிமோனியா என்ற கொரோனா பாதிப்பால் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்து இருக்கின்றனர். அவரின் சுவாச பாதை முழுவதும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இவருக்கு ஏற்கனவே தைமஸ் சுரப்பி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு இருந்ததாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. கடுமையான சுவாசப் பாதை பாதிப்பு மற்றும் ஏற்கனவே உடலில் இருந்த கோளாறு காரணமாக அவர் உயிரிழந்து இருக்கிறார்.
உலக அளவில் கொரோனா நோய்ப் பாதிப்பு வரிசையில் தற்போது இத்தாலியைப் பின்னுத்தள்ளி இந்தியா வேகமாக 6 ஆம் இடத்தைப் பிடித்து இருக்கிறது. மே மாதத்தின் இறுதி வரை இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு குறைவாகவே இருந்து வந்தது. இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதுமட்டுமல்லாமல் தற்போது தமிழகம், தெலுங்கானா, ஆந்திரா போன்ற பகுதிகளில் வீரியம் மிக்க கொரோனாவின்புதிய வகை பரவிவருவதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று அறிகுறிகள் இல்லாமலே அதிகளவில் பரவி வருவதாகவும் இந்திய மருத்துவ கவுன்சில் தகவல் தெரிவித்து உள்ளது. அறிகுறிகளே இல்லாமல் நோய்த்தொற்று பரவுவதால் மிக வேகமாக உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.