கொரோனா தடுப்பு; கேரளாவின் அசத்தலான புதிய திட்டம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்து இருக்கிறது. கேரளாவில் மட்டும் இந்த எண்ணிக்கை 21 ஆக இருக்கிறது. ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவும் கொரோனாவின் சங்கிலித் தொடர் பாதிப்பை தடுப்பதற்காக கேரள அரசு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்தத் திட்டத்திற்கு Break the Chain என்று பெயரும் வைக்கப் பட்டு இருக்கிறது.
கேரளாவில் உள்ள ஒவ்வொரு நிறுவனம் மற்றும் மருத்துவ மனைகளில் அரசு சார்பில் ஒரு பூத் வைக்கப்படும். ஒவ்வொரு இடத்திற்குள்ளும் நுழைவதற்கு முன்னர் அந்த பூத்துக்குள் சென்று விட்டுத்தான் உள்ளே நுழைய வேண்டும். பூத்திற்குள் கைகளைக் கழுவுவதற்கான ஏற்பாடுகள் மற்றும் சானிடைசர் (Hand Sanitizer) வைக்கப் பட்டு இருக்கும். இந்த பூத்தை ஒவ்வொருவரும் பயன்படுத்தும் போது கொரோனா வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவுவது முழுவதுமாகக் கட்டுப் படுத்தப் படும் என்று அம்மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்து இருக்கிறார்.
மேலும், அம்மாநிலம் முழுவதும் மாஸ்க் தட்டுப்பாடு நிலவுவதால் தற்போது சிறை கைதிகளைக் கொண்டு புதிதாக மாஸ்க்குகள் தயாரிக்கும் பணி முடுக்கிவிடப் பட்டு இருக்கிறது. மேலும், அம்மாநிலத்தில் சுமார் 14,944 பேர் தொடர் கண்காணிப்பில் வைக்கப் பட்டு இருக்கின்றனர். மருத்துவமனைகளின் நேரடிக் காண்காணிப்பில் 259 பேர் வைக்கப் பட்டு இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
கேரளா முதலமைச்சர் பிணராயி விஜயன் வெளியட்டுள்ள அறிக்கையில் “கேரளா முழுவதும் தங்கியிருக்கும் வெளிநாட்டு பயணிகள் தங்களைப் பற்றிய விவரங்களை அம்மாவட்ட ஆட்சியருக்குத் தெரிவிக்க வேண்டும். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை உடனடியாக நடத்தப்படும். அந்தப் பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வந்தால் மட்டுமே தொடர்ந்து நடமாட அனுமதிக்கப் படுவார்கள். காவல் துறையினர் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வெளிநாட்டு பயணிகள் பற்றிய விவரங்களை சேகரித்து அம்மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும்” எனவும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
கேரளாவில் Break the chain திட்டத்திற்கு பெருத்த வரவேற்பு கிடைத்து வருகிறது என்பதும் குறிப்பிடத் தக்கது. சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா இந்தப் புதிய திட்டம் பற்றி பேசும்போது ஒவ்வொருவரும் பூத்தைப் பயன்படுத்தி விட்டு, பிறகு உங்களது வேலையைத் தொடருங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். இதனால் பாதிப்புகள் ஏற்படுவது குறைக்கப் படும் எனவும் நம்பிக்கை அளித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments