கொரனா பாடல் மூலம் மீண்டும் இணைந்த இசைக்கலைஞர்கள்

உலகம் முழுவதும் மனித இனத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா குறித்த விழிப்புணர்வை திரையுலகை சேர்ந்த பலர் ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது இசைக்கலைஞர்கள் ஒரு பாடல் மூலம் மீண்டும் இணைந்து கொரோனா விழிப்புணர்வு பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

நாளை நமக்கொரு காலம் வரும் என்ற இந்த கொரோனா விழிப்புணர்வு பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பாடலுக்கு இசையமைத்த் சதீஷ் ஏற்கனவே தமிழக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு வானே இடிந்ததம்மா என்ற இரங்கல் பாடலை கம்போஸ் செய்து பெரும் புகழ் பெற்றவர் என்பதும் இந்த பாடலை எழுதிய அஸ்வின் தான் இந்த கொரோனா பாடலையும் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே இந்த பாடல் மூலம் மீண்டும் சதீஸ் வர்சன் மற்றும் அஸ்மின் ஆகியோர் இணைந்துள்ளனர்.

இசையமைப்பாளர் சதீஸ் வர்சன் ஏற்கனவே எஸ்பி ஜனநாதன் இயக்கிய புறம்போக்கு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கொரோனா விழிப்புணர்வு பாடலை எழுதிய அஸ்மின் ஏற்கனவே விஜய் ஆண்டனி நடித்த ‘நான்’ என்ற படத்தில் இடம்பெற்ற தப்பெல்லாம் தப்பேயில்லை மற்றும் அஜித்தின் விஸ்வாசம் திரைப்படத்தில் இடம்பெற்ற 'தூக்குதொர பேரக்கேட்டா வாயப்பொத்தும் நெருப்பு ஆகிய பாடலையும் எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பயணிகளுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை

வெளிநாட்டில் இருந்து தமிழகத்திற்கு வந்த பயணிகள் பலருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றாலும் 14 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்

இந்தியா முழுவதும் 80 மாவட்டங்கள் 31 ஆம்தேதி வரை முடக்கப்படும் – மத்திய அரசு அறிவிப்பு!!!

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நேற்று ஒருநாள் மட்டும் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டு அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது.  அதேபோல

மருத்துவர்களுக்கு கைதட்டி நன்றி தெரிவித்த விக்கி-நயன் ஜோடி!

கோலிவுட் திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வரும் நிலையில் இந்த ஆண்டு இருவருக்கும் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 9ஆக உயர்வு

கொரோனாவால் தமிழகத்தில் 9 பேர் இதுவரை தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஒன்பது பேர்களும் வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்

'தலைவா' என அழைத்து ரஜினிக்கு நன்றி கூறிய 'டுவிட்டர் இந்தியா'

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று முன் தினம் பதிவு செய்த கொரோனா குறித்த விழிப்புணர்வு வீடியோவுக்கு ஏகப்பட்ட புகார் வந்ததால், டுவிட்டர் இந்தியா