வழுக்கை தலைகளை குறிவைத்துத் தாக்கும் கொரோனா!!! அச்சமூட்டும் ஆய்வுத் தகவல்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸால் பெண்களைவிட ஆண்கள் அதிகமாக இறந்து போகின்றனர் என்று இங்கிலாந்து பொதுச் சுகாதார நிறுவனத்தால் நடத்தப் பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டது. அதற்கு காரணம் இயல்பிலேயே பெண்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் வகையில் பெண்களுக்கு இரண்டு எக்ஸ் குரோமோசோம்கள் இருக்கின்றன. ஆனால் ஆண்களை பொறுத்த வரையில் ஒரு எக்ஸ் மற்றும் ஒரு ஓய் குரோமோசோம் மட்டுமே இருக்கும். இதனால் பெண்களைவிட ஆண்களின் நோய் எதிர்ப்பு மண்டலம் நோய்க்கு எதிராக போராடும் போது சற்று குறைவாகத்தான் செயல்படும் என்ற தகவலும் வெளியாகி இருந்தது. இந்நிலையில் வழுக்கை தலையுடன் இருப்பவர்களை கொரோனா வைரஸ் கிருமி எளிதாகப் பற்றிக்கொள்ளும் என்ற புதிய ஆய்வு முடிவு வெளியாகி கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மருத்துவ இணையதளமான தி ஹெல்த் சைட் வெய்தி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இந்த செய்தி வெளியிடப் பட்டுள்ளது.
பிரவுன் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் வழுக்கை தலை உள்ளவர்களுக்கு அதிகளவு கொரோனா நோய்த்தொற்று ஏற்படுவதாக கூறியுள்ளனர். ஆண்களுக்கு வழுக்கைத் தலையானது ஹார்மோன் குறைபாடு காரணமாக தோன்றுகிறது. இந்த ஹார்மோன்களே கொரோனா வைரஸ் பற்றிக் கொள்வதற்கும் ஒரு பெரிய வாய்ப்பாக அமைந்து விடுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளனர். அதாவது ஆண்களின் பாலியல் ஹார்மோன்களாக கருதப்படும் டெஸ்டோஸ்டிரோன் அடங்கிய ஆண்ட்ரோஜன்கள் கொரோனா வைரஸ் கிருமிகளை அதிகம் ஈர்க்கும் தன்மையைப் பெற்றிருக்கின்றன. இதே ஆண்ட்ரோஜன்கள்தான் வழுக்கை தலைக்கும் காரணமாக அமைகிறது.
மாட்ரிட் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்ற 79 விழுக்காட்டினர் வழுக்கை தலையுடன் இருந்ததாக அமெரிக்கன் அகாடமி அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.. இதேபோல ஸ்பெயின் நாட்டிலும் நடத்தப்பட்ட 3 சிறிய ஆய்வுகளில் இதே முடிவு எட்டப்பட்டுள்ளது. வலுக்கைத் தலையுடன் இருக்கும் ஆண்களுக்கு மட்டுமல்லாது வழுக்கைத் தலையுடன் இருக்கும் பெண்களையும் கொரோனா விரைவாகப் பற்றிக் கொள்வதற்கு வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். புகைப்பிடிப்பவர்கள், இதயம் மற்றும் நுரையீரல் தொற்று உள்ளவர்களை கொரோனா தாக்கும்போது பாதிப்பு அதிகமாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் ஏற்கனவே கூறியிருந்தனர். இந்நிலையில் வழுக்கை தலையும் ஒரு மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்தலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout