மலேசியாவில் இருந்து கோவை வந்த நபருக்கு கொரோனா? அதிர்ச்சி தகவல்
- IndiaGlitz, [Monday,March 09 2020]
சீனாவின் வூகான் என்ற பகுதியில் இருந்து ஆரம்பித்த கொரானா வைரஸ் படிப்படியாக சீனா முழுவதும் பரவி, சுமார் 2 ஆயிரம் உயிர்களை பலி வாங்கி விட்டது. இந்த நிலையில் சீனா முழுவதும் பரவியது மட்டுமல்லாமல் அண்டை நாடுகளிலும், அமெரிக்கா உள்பட பல நாடுகள் கொரானா வைரஸ் பரவி உள்ளது. குறிப்பாக இத்தாலி மற்றும் ஈரான் ஆகிய இரண்டு நாடுகளில் மட்டும் நேற்று ஒரே நாளில் கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக 100 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்தியாவிலும் கொரானா வைரஸ் தாக்கியுள்ளதாகவும் இந்தியாவில் 40 பேர் கொரானா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளியானது. அதுமட்டுமன்றி தமிழகத்தைச் சேர்ந்த இருவருக்கு கொரானா வைரஸ் பாதிப்பு இருப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் மலேசியாவில் இருந்து கோவை வந்த கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கொரானா வைரஸ் குறித்த அறிகுறி இருப்பதாகவும் இதனை அடுத்து அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. பரிசோதனை முடிந்த பின்னரே கொரானா வைரஸ் பாதிப்பு அவருக்கு இருக்கிறதா? என்பதை உறுதி செய்ய முடியும்
இந்த நிலையில் நேற்று அமெ.ரிக்காவில் இருந்து சென்னை வந்த 15 வயது சிறுவனுக்கு கொரானா வைரஸ் பாதிப்பின் அறிகுறி இருந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு கொரானா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Corona Update: this comes as a good news, two samples for #COVIDー19 tested negative, the 15Y boy who arrived from TX,USA & the spouse of the corona patient who is undergoing treatment at the #RGGH,Chennai.#TNHealth continues monitoring. @MoHFW_INDIA #CVB
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) March 9, 2020