கொரோனா: BGC காசநோய்த் தடுப்பூசியை மனிதர்கள்மீது பரிசோதிக்கும் அமெரிக்கப் பல்லைக்கழகம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
முன்னதாக காசநோய் தடுப்பூசி அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ள நாடுகளில் கொரோனா பாதிப்பு குறைவாக இருக்கிறது என ஒரு ஆய்வு வெளியாகி இருக்கிறது. இதையடுத்து உலகளாவிய மருந்துத்துறையில் Bacillus Calmetter-Guerin (BCG) எனப்படும் காசநோய் தடுப்பூசி குறித்த பேச்சு அதிகரித்து காணப்பட்டது.
காசநோய் தடுப்பூசி கொரோனாவுக்கு பயனளிக்கும் என்பது மதிப்பாய்வு செய்யப்படாத கருத்து என்றும் சில விஞ்ஞானிகள் எச்சரித்தனர். காசநோய் என்பது அடிப்படையில் பாக்டீரியாவினால் உண்டாகும் நோய்த்தொற்று. கொரோனா என்பது வைரஸ் கிருமி. இரண்டும் அடிப்படையில் வெற்வேறான தன்மைக் கொண்டவை. மேலும் ஒரு பெருந்தொற்றில் சூழல், இடம் போன்றவையும் பெரும்பங்கு வகிக்கின்றன. ஆஸ்திரேலியாவிலும் நெதர்லாந்திலும் சுகாதாரப் பணியாளர்களிடையே நடத்தப்பட்ட பி.சி.ஜி தடுப்பு சோதனையை வைத்துக்கொண்டு அனைத்து நாடுகளிலும் காசநோய் தடுப்பூசி நல்லப் பலனைத் தரும் என எதிர்ப்பார்க்க முடியாது எனவும் கருத்துத் தெரிவித்திருந்தனர். இதுகுறித்து ஏப்ரல் 12 ஆம் தேதி WHO ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் “Bacillus Calmetter-Guerin (BCG) எனப்படும் காசநோய் தடுப்பூசி கொரோனா பாதிப்பில் இருந்து மக்களைக் காப்பாற்றும்” என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை எனத் தெரிவித்தும் குறிப்பிடத்தக்கது.
அடிப்படையில் பிசிஜி தடுப்பூசி என்பது பொது நோய்களுக்கான எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப் படும் தடுப்பு மருந்தாகும். இதனால் பிறந்த குழந்தையின் இறப்பு விழுக்காடு 50% குறைந்துள்ளதாக மருத்துவ உலகம் கூறுகிறது. காசநோய் மட்டுமில்லாமல் ஒவ்வாமை, ஆஸ்துமா, தோல் அலர்ஜி போன்ற பாதிப்புகளுக்கு எதிராகவும் இது வேலை செய்கிறது. தொழுநோய் எதிர்ப்பிலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது. கொரோனா அபாயத்தில் இருந்து தப்பிக்க இதுவரை தடுப்பூசி எதுவும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் பி.சி.ஜி குறித்த இந்த ஆய்வு முடிவு பல்வேறு நாட்டு விஞ்ஞானிகளை ஈர்த்தது.
தற்போது அமெரிக்காவின் டெக்சாஸ்ஸில் உள்ள A&M பல்கலைக்கழகம் கொரோனாவுக்கு எதிராக காசநோய் தடுப்பூசியை மனிதர்களின்மீது பரிசோதித்துப் பார்க்கும் ஆய்வினைத் தொடங்கியிருக்கிறது. காசநோய் தடுப்பூசி போட்டுக்கொண்ட நாடுகளில் கொரோனா நோய்த்தொற்று ஏற்படுவது இல்லை, இறப்புகள் முற்றிலும் குறைவு என்ற ஆய்வுமுடிவுகள் வெளியானதை அடுத்து A&M பல்கலைக்கழகம் பி.சி.ஜி காசநோய்த் தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தும் ஆய்வில் ஈடுபட்டுள்ளது. தற்போது கொரோனாவுக்கு எதிராக பி.சி.ஜி காசநோய்த் தடுப்பு மருந்தானது, நோய் எதிர்ப்பு மண்டலத்தை அதிகப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், “பி.சி.ஜி என்பது கொரோனா வைரஸை குணப்படுத்துவதற்காக அல்ல, ஆனால் கொரோனா வைரஸ்க்கு ஒரு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் வரையில் இதை நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கு முயற்சிக்கு பயன்படுத்த முடியும்” என்று A&M பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்புத்துறையின் பேராசிரியர் டாக்டர் சிரிலோ தெரிவித்து உள்ளார். முதற்கட்டமாக இந்தச் சோதனைக்கு அமெரிக்காவின் 1,800 சுகாதாரப் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த மருந்தால் கொரோனா நோயைக் கட்டுப்படுத்தமுடியாது. ஆனால் கொரோனா நோய்க்கு எதிராக நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்க இது கண்டிப்பாக உதவும் என்று அப்பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். கொரோனாவுக்கு எதிராக இந்த மருந்தை “பயிற்சி பெற்ற நோய் எதிர்ப்பு சக்தி” என்று விஞ்ஞானிகள் கூறிவருகின்றனர்.
கொரோனா நோய்த்தொற்றானது முதலில் மனிதர்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை தாக்கி அழிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் பி.சி.ஜி காசநோய் தடுப்பூசி கைக்கொடுக்கும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை அளிக்கின்றனர். Bacillus Calmetter-Guerin (BCG) எனப்படும் காசநோய் தடுப்பூசி ஏற்கனவே சிறுநீர்ப்பை மற்றும் புற்றுநோய்க்கு எதிராக சிறந்த பயனளிப்பதாக நிரூபிக்கப் பட்டு இருக்கிறது. அமெரிக்காவின் FDA நிறுவனத்தால் இந்த மருந்து உறுதிசெய்யப்பட்டது. எனவே இந்த மருந்தை குறித்த பரிசோதனைகள் விரைவில் நடத்தி முடிக்கப்படும் எனவும் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானிகள் நம்பிக்கை அளித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments