உலகம் முழுவதும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படும் வயதானவர்கள்!!!!

  • IndiaGlitz, [Thursday,April 16 2020]

 

கொரோனா பரவலில் அதிகம் பாதிக்கப்படுவது வயதானவர்களாகத் தான் இருக்கின்றனர். கொரோனா அனைவருக்கும் ஒரே மாதிரியான பாதிப்பினை கொடுக்காமல் வேறுபட்ட தன்மைகளைக் கொண்டிருக்கின்றன. உலகச்சுகாதார நிறுவனம் வயதானவர்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறு தொடர்ந்து அறிவுறுத்திவரும் நிலையில் வயதானவர்கள் கொரோனா கட்டத்தை எப்படி கடக்கிறார்கள் என்பதும் அவசியமான ஒன்றாக தற்போது மாறியிருக்கிறது. கொரோனாவால் வயதானவர்கள் ஏன் அதிகளவு பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்பது குறித்து லண்டன் இம்பீரியல் மருத்துவக் கல்லூரி ஆய்வு மேற்கொண்டுவருகிறது.

கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் எந்த வயதினருக்கு தீவிரச் சிகிச்சை தேவைப்படுகிறது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ஆய்வில் 50 வயதுடைய கொரோனா நோயாளிகளில் 5 விழுக்காட்டினருக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டதாகத் தெரியவந்திருக்கிறது. ஆனால் 70-79 வயது கொரோனா நோயளிகளில் 24 விழுக்காட்டினருக்கு தீவிரச் சிகிச்சை தேவைப்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவே 40 வயதுக்கும் குறைவாகவுள்ள கொரோனா நோயாளிகளில் 5 விழுக்காட்டினருக்கு மட்டுமே சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது என்றும் பெரும்பாலானோருக்குச் சிகிச்சையே தேவைப்படுவதில்லை என்றும் அந்த ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

உலகம் முழுக்க கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களில் அதிகம்பேர் வயதானவர்களாகவே இருக்கின்றனர். 60 வயதில் இருக்கும் கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களில் 27 விழுக்காடு தீவிரச்சிகிச்சை தேவைப்படுகிறது. 70 வயதில் இருக்கும் கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களில் 43 விழுக்காடு தீவிரச்சிகிச்சை தேவைப்படுகிறது. மேலும், 80 வயதில் இருக்கும் கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களில் 71 விழுக்காடு தீவிரச்சிகிச்சை தேவைப்படுகிறது. வயதுக்கூட கூட அவர்களில் அளிக்கப்பட வேண்டிய சிகிச்சையும் அதிகரித்து காணப்படுகிறது. இங்கிலாந்து மற்றம் அயர்லாந்தில் கொரோனா நோயால் அதிகளவு பாதிக்கப்பட்டவர்களின் சராசரி வயது 63 ஆக இருக்கிறது என்றும் இந்த ஆய்வு எடுத்துக்காட்டியிருக்கிறது.

அமெரிக்காவின் பாதிப்பு எண்ணிக்கையிலும் வயதான நபர்கள் கணிசமாக உள்ளனர். அந்நாட்டில் உள்ள மொத்த கொரோனா நோயாளிகளில் 53 விழுக்காட்டினர் 55 வயதிற்கும் அதிகமானவர்களாக இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தாலியிலும் இதே நிலைமைதான். அந்நாட்டில் கொரோனா இறப்பு விகிதத்தில் 0.4 விழுக்காடு மக்கள் 40 வயதிற்கும் குறைவாக இருந்ததாகவும், 19.7 விழுக்காடு மக்கள் 80 வயதைத் தாண்டியவர்களாக இருந்ததாகவும் இந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

இந்த ஆய்வறிக்கையைப் பார்க்கும்போது உலகம் முழுவதும் 60 வயதிற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. இவர்களைத் தவிர சில நேரங்களில் இளம் தம்பதியினர், இளைஞருக்கும் தீவிரச் சிகிச்சை தேவைப்படுவதாகவும் அவர்களில் பலர் உயிரிழப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். நோய்த்தொற்று ஏற்படுவதற்கு வயது ஒருகாரணமாக இருப்பதில்லை. நோய்த்தொற்று ஏற்பட்டு அதனை எதிர்க்கொள்வதில் உள்ள சிக்கலில் வயது ஒரு பெரும் காரணியாக இருப்பதாக மருத்துவ உலகம் கருதிவருகிறது.

சீனாவில் கொரோனா நோய்த்தொற்றினால் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அக்குழந்தைகளில் பலருக்கு இறப்பும் நிகழ்ந்திருக்கிறது. பிரிட்டனில் 18 வயதுடைய ஒரு இளைஞன் கொரோனாவால் உயிரிழந்தார். இந்த புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது கொரேனாவால் இளைஞர்கள், குழந்தைகளும் உயிழிப்பது தெரியவருகிறது. அதே நேரத்தில் கேரளாவில் 90 வயதுகளில் உள்ள தம்பதியினருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார்கள். அதேபோல சீனாவிலும் 100 வயதுகளில் இருந்த முதியவர் கொரோனாவில் இருந்து விடுபட்ட செய்தியை ஊடகங்களில் பார்க்க முடிந்தது.

ஆக, கொரோனா நோய் பாதித்தாலும், நோய் எதிர்ப்பு மண்டலம் நல்ல நிலையில் இருப்பவர்கள் அதிலிருந்து தப்பித்துக்கொள்கின்றனர். குழந்தைகளுக்கு அத்தகைய வீரியத்தன்மை இருப்பதில்லை. எனவே குழந்தைகள் விஷயத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும் என உலகச் சுகாதார அமைப்பு அறிவுறுத்திவருகிறது. சில சமயங்களில் இளைஞர்களுக்கு கொரோனா நோய்த்தொற்றினால் ஏற்படும் அறிகுறிகள் எதுவும் வெளிப்படையாகத் தெரிவதில்லை. இந்தத் தன்மையால் அவர்கள் பலருக்கும் கொரோனா வைரஸை பரப்பிவிடும் அபாயமும் இருப்பதாக உலகச்சுகாதார மையம் எச்சரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் சாதாரணமாக 2 முதல் 3 நபர்களுக்கு வைரஸ்களை கடத்திவிடுகிறார்கள். இதே நிலைமை நீடித்தால் 2020 வரை சமூக விலகலைத் தொடரவேண்டிய அபாயம் தொடரும் என ஆய்வுலகம் எச்சரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் எப்போது? உயர்கல்வித்துறை அறிவிப்பு

தமிழகத்தின் கல்லூரிகளில் நடத்தப்படும் அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் அடுத்த கல்வி ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் இன்று 25 பாசிட்டிவ் மட்டுமே, விரைவில் கொரோனாயில்லா மாநிலம்: முதல்வர் நம்பிக்கை

தமிழகத்தில் கொரோனாவால் தாக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தினமும் 50க்கு மேல் இருந்து வந்தது என்பதும், ஒருசில  நாட்களில் 100க்கும் மேல் இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பதும் தெரிந்ததே

குற்றப்பரம்பரை கதையை படிக்கும் பிரபல இயக்குனர்: பாலா பாரதிராஜாவுக்கு போட்டியா?

எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி எழுதிய 'குற்றப்பரம்பரை' என்ற படத்தை இயக்குனர் இமயம் பாரதிராஜா திரைப்படமாக இயக்க இருப்பதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது

இதுவே ரொம்ப லேட்: பிரபல இயக்குனருக்கு வாழ்த்து தெரிவித்த தல அஜித்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வெற்றிப் படங்களில் ஒன்றான 'பில்லா' படத்தின் ரீமேக் படமான 'பில்லா' மற்றும் 'ஆரம்பம்' ஆகிய இரண்டு அஜித் படங்களை இயக்கியவர் இயக்குனர் விஷ்ணுவர்த்தன் என்பது தெரிந்ததே.

பீட்சா டெலிவரி செய்தவருக்கு கொரோனா: ஏரியாவையே மடக்கிய காவல்துறை

டெல்லியில் பீட்சா டெலிவரி செய்த நபர் ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் வசித்த பகுதி மற்றும் அவர் பீட்சா டெலிவரி செய்த பகுதி முழுவதையும்