ஒரே நாளில் 50 ஆயிரத்தைத் தாண்டிய கொரோனா பாதிப்பு!!! படுமோசத்தில் இருக்கும் பிரேசில்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகமே கொரோனா கணக்குகளை பார்த்து மிரண்டு வரும் சமயத்தில் நேற்று ஒரே நாளில் பிரேசிலில் புதிதாக 54 ஆயிரத்து 771 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு இருக்கிறது. இந்த எண்ணிக்கை உலகிலேயே இதுவரை உயர்ந்த பட்சமாகக் கருதப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அந்நாட்டில் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியிருப்பதாகவும் அந்நாட்டின் சுகாதாரத்துறை உறுதிப்படுத்தி இருக்கிறது.
உலகச் சுகாதாரத் துறை அமைச்சகம் ஒரு அறிவிப்பில் கடந்த சில நாட்களாக உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் 1 லட்சத்தை தாண்டுவதாக எச்சரிக்கை செய்து இருந்தது. இந்நிலையில் ஒரு நாட்டில் மட்டும் 54 ஆயிரத்தைத் தாண்டி கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்ற செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவே பார்க்கப்படுகிறது. மேலும் இன்று காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் ,206 பேர் உயிரிழந்து உள்ளனர் என்பதும் குறிப்பிட்டத்தக்கது.
தற்போது அமெரிக்காவிற்கு அடுத்த நிலையில் கொரோனா அதிகம் பாதிப்பு உள்ள நாடாக பிரேசில் இருந்து வருகிறது. இதுவரை 49 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் பாதிப்பு எண்ணிக்கை இதுவரை 22 லட்சத்தை தாண்டியிருக்கிறது. உயிரிழப்புகள் 1 லட்சத்து 20 ஆயிரத்தை கடந்து இருக்கிறது. கொரோனாவின் தாக்கம் குறைவாக இருப்பதாகக் கருதப்பட்ட பல ஆப்பிரிக்க நாடுகளிலும் தற்போது பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் தெற்காசியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் அதிகமாக உயிரிழப்பதாகவும் ஒரு ஆய்வறிக்கை வெளியாகி இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com