நோயை பரப்பும் திட்டத்துடன் சென்னையை சுற்றிய கொரோனாவால் பாதித்த இளைஞர்: அதிர்ச்சி தகவல்

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனை அல்லது வீட்டில் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்திய நிலையில் சென்னையை சேர்ந்த கொரோனாவால் பாதிக்கப்பட்ட வாலிபர் ஒருவர் சுகாதாரத்துறையின் அறிவுரையை மீறி தெருவில் சுற்றி திரிந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவருக்கு கடந்த மாதம் 25ஆம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனை அடுத்து மருத்துவர்கள் அவரை 40 நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி இருந்தனர்.

இந்த நிலையில் ஒரு சில நாட்கள் மட்டும் தனித்திருந்த அந்த இளைஞர் அதன் பின்னர் வெளியே சுற்றத் தொடங்கிவிட்டார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்த நிலையில் சுகாதாரத்துறையினர் அந்த இளைஞரிடம் இதுகுறித்து விசாரணை செய்தபோது, அந்த வாலிபர் வேண்டும் என்றே நோயை பரப்பும் திட்டத்துடன் வெளியே சுற்றுவது தெரியவந்தது.

இதனை அடுத்து சுகாதாரத்துறை அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த இளைஞர் மீது மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கொரோனாவால் பாதித்த வாலிபர் ஒருவர் நோயை பரப்பும் வகையில் சென்னையில் சுற்றி திரிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

புதுவைக்குள் நுழைய யாருக்கும் அனுமதி இல்லை: முதல்வரின் அதிரடி அறிவிப்பால் பரபரப்பு

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிக அதிகமாக பரவி வரும் நிலையில் சென்னை உள்பட ஒரு சில நகரங்களில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை உச்சக்கட்டத்தில் உள்ளது

சுஷாந்த்சிங்கின் கடைசி படம்: ரசிகர்களின் கோரிக்கையை முன்மொழிந்த ஏ.ஆர்.ரஹ்மான் 

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் மறைவு பாலிவுட் திரை உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்பது தெரிந்ததே. அவரது மறைவை இன்னும் கூட சில பாலிவுட் பிரபலங்கள் நம்பமுடியாமல்

சென்னையில் குறைந்தது கொரோனா: ஆனால் பலி எண்ணிக்கை அதிகரிப்பதால் பரபரப்பு

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த தகவலை தினந்தோறும் தமிழக அரசின் சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் சற்றுமுன்  இன்றைய பாதிப்பு குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

சுஷாந்த்சிங் மறைவால் 'தோனி 2' படத்தில் ஏற்பட்ட திடீர் திருப்பம்

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் மறைவால் பாலிவுட்டில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் அவர் இல்லாமல் 'தோனி 2' படம் குறித்த அறிவிப்பில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது 

உயிர்களின் மதிப்பறிந்தவர் போரை விரும்ப மாட்டார்கள்: ராணுவ வீரர் பழனி மறைவு குறித்து கமல்

இந்தியா மற்றும் சீனா எல்லையான லடாக் பகுதியில் நேற்று இரவு திடீரென இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்களுக்கு இடையே நடந்த மோதலில் 3 இந்திய வீரர்களும் 5 சீன வீரர்களும் உயிரிழந்தனர்