நோயை பரப்பும் திட்டத்துடன் சென்னையை சுற்றிய கொரோனாவால் பாதித்த இளைஞர்: அதிர்ச்சி தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனை அல்லது வீட்டில் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்திய நிலையில் சென்னையை சேர்ந்த கொரோனாவால் பாதிக்கப்பட்ட வாலிபர் ஒருவர் சுகாதாரத்துறையின் அறிவுரையை மீறி தெருவில் சுற்றி திரிந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவருக்கு கடந்த மாதம் 25ஆம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனை அடுத்து மருத்துவர்கள் அவரை 40 நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி இருந்தனர்.
இந்த நிலையில் ஒரு சில நாட்கள் மட்டும் தனித்திருந்த அந்த இளைஞர் அதன் பின்னர் வெளியே சுற்றத் தொடங்கிவிட்டார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்த நிலையில் சுகாதாரத்துறையினர் அந்த இளைஞரிடம் இதுகுறித்து விசாரணை செய்தபோது, அந்த வாலிபர் வேண்டும் என்றே நோயை பரப்பும் திட்டத்துடன் வெளியே சுற்றுவது தெரியவந்தது.
இதனை அடுத்து சுகாதாரத்துறை அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த இளைஞர் மீது மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கொரோனாவால் பாதித்த வாலிபர் ஒருவர் நோயை பரப்பும் வகையில் சென்னையில் சுற்றி திரிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout