சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள் எவை எவை? மண்டலவாரி பட்டியல்

தமிழக அரசின் தீவிர நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டாலும் தலைநகர் சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது

நேற்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 104 பேர்களில் 94 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து சென்னையில் மொத்தம் 767 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சென்னையில் எந்தெந்த பகுதியில் ஒகொரோனா ரு பாதிப்பு அதிகம் என்பது குறித்த மண்டலவாரிய பட்டியல் ஒன்றை சென்னை மாநகராட்சியின் சற்றுமுன் வெளியிட்டுள்ளது. இதன்படி அதிகபட்சமாக ராயபுரத்தில் மொத்தம் 189 பேர்கள் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து திருவிக நகரில் 169 பேர்களும், தேனாம்பேட்டையில் 85 பேர்களும், தண்டையார்பேட்டையில் 77 பேர்களும் கோடம்பாக்கத்தில் 63 பேர்களும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் வளசரவாக்கத்தில் 30 பேர்களும் அடையாறு பகுதியில் 19 பேர்களும், திருவொற்றியூரில் 17 பேர்களும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மிகவும் குறைந்தபட்சமாக மணலியில் ஒரே ஒருவருக்கும் சோழிங்கநல்லூரில் இரண்டு பேருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 

More News

கொரோனாவுக்கு எதிரான போரில் சிறப்பாகப் பணியாற்றும் உலக நாடுகளின் பெண் தலைவர்கள்!!!

உலக நாடுகளில் பெண் தலைவர்கள் ஆட்சி செய்யும் நாடுகளில் கொரோனா கட்டுக்குள் இருப்பதாகத் தற்போது செய்திகள் வலம் வருகின்றன.

கொரோனா வார்டில் 20 நாட்கள் தொடர்பணி: வீடு திரும்பிய பெண்ணுக்கு காத்திருந்த ஆச்சரியம்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி மனித இனத்திற்கே அச்சத்தை கொடுத்து வரும் நிலையில் தற்போது மருத்துவர்களும் நர்சுகளும் மருத்துவ ஊழியர்களும்

பழம்பெரும் பாலிவுட் நடிகர் மருத்துவமனையில் அனுமதி:

பிரபல பாலிவுட் நடிகர் இர்பான்கான் நேற்று மரணம் அடைந்த அதிர்ச்சியில் இருந்தே இன்னும் பாலிவுட் திரை உலகினர் மீளமுடியாத நிலையில் தற்போது பழம்பெரும் பாலிவுட் நடிகர் ரிஷிகபூர் மூச்சுத்திணறல் காரணமாக

இந்தியாவில் கொரோனா பாதிப்பு:  33 ஆயிரத்தை தாண்டியதால் பரபரப்பு

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் ஆயிரத்திற்கும் மேல் உள்ள நிலையில் நேற்று இந்தியாவில் 31,332 பேருக்கு பாதிப்பு இருந்த நிலையில்

ஜோதிகா புகார் கூறிய மருத்துவமனையில் பிடிபட்ட 10 பாம்புகள்!

நடிகை ஜோதிகா சமீபத்தில் சினிமா விழா ஒன்றில் பேசியபோது, 'தஞ்சை மருத்துவமனைக்கு படப்பிடிப்பின் போது தான் சென்றதாகவும் அப்போது அங்கு பராமரிப்பு சரியில்லாமல் இருப்பதை