திறக்கட்ட கல்லூரி… 14 நாட்களில் 70 பேருக்கு கொரோனா பாதிப்பா??? கதிகலங்க வைக்கும் தகவல்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா தாக்கம் காரணமாக கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் தமிழகத்தின் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் கல்வி நிறுவனங்களுக்குச் செல்லாமல் ஆன்லைனில் பாடங்களை கவனித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த டிசம்பர் 7 ஆம் தேதி முதல் கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் மட்டும் கல்லூரி, பல்கலைக் கழகத்திற்கு செல்லலாம் எனத் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
இதையடுத்து தற்போது அனைத்து கல்லூரிகளும் திறக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி முதல் தற்போது வரை 71 பேருக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டு இருப்பதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இதில் 4 பணியாளர்கள் உட்பட 66 மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
முதலில் சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள மெஸ் ஒன்றிற்கு சென்று வந்த 4 மாணவர்களுக்கு கொரோனா பதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப் பட்டதாகக் கூறப்படுகிறது. அதையடுத்து அந்த மெஸ்க்கு சென்று வந்த மற்ற 20 மாதிரிகள் சேகரிக்கப் பட்டதாகவும் அதையடுத்து அங்கு வேலைப்பார்த்த 4 பணியாளர்களுக்கு கொரோனா உறுதிச் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் மற்ற தொடர்புகளை கண்காணித்தன் மூலம் கடந்த 11 ஆம் தேதி 11 பேருக்கும் 12 ஆம் தேதி 12 பேருக்கும் நேற்று 32 பேருக்கும் கொரோனா உறுதிச் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து வளாகத்திற்குள் செயல்பட்ட அனைத்து உணவகங்களும் மூடப்பட்டு உள்ளன. இந்நிலையில் வெறுமனே 14 நாட்களில் 70 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பது மாணவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதனால் தற்போது வளாகத்தில் உள்ள 774 மாணவர்களில் 408 பேருக்கு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்கு அனுப்பப் பட்டு உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சென்னை கிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் தகவல் கிடைத்து உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout