கொரோனா 2-ஆம் அலை...! தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் மூடல்....!

  • IndiaGlitz, [Friday,April 16 2021]

கொரோனா தொற்று மற்ற மாநிலங்களை போலவே, தமிழகத்திலும் வேகமாக பரவி வருவதால், வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் தஞ்சை பெரிய கோவில் மூடப்பட்டுள்ளது. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், மத்திய தொல்லியத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நினைவு இடங்களை ,வரும் மே மாதம்-15 ஆம் தேதி மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அந்தவகையில் உலகப்புகழடைந்த தஞ்சை பெருவுடையார் கோவில் இன்று மூடப்பட்டுள்ளது. இக்கோயிலின் வாயில் கதவுகள் அடைக்கப்பட்ட காரணத்தால், தரிசனத்திற்கு வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினார்.

நாமக்கல் மாவட்டம் மலைக்கோட்டை இருக்கும், நாமகிரி தாயார் – நரசிம்மர் கோயில் மற்றும் அரங்கநாதர் கோயில் கோவில்கள் மூடப்பட்டு, மத்திய தொல்லியத்துறை சார்பாக கோயிலின் முன்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. அதில் கொரோனா தொற்று காரணமாக, வரும் மே-15 ஆம் தேதிவரை கோவில்கள் மூடப்படும் என்றும்,பக்தர்கள் வழிபடத்தடை என்றும் கூறப்பட்டிருந்தது. கோவில் விதிகளின்படி, பூஜைகள் மட்டும் நடத்தப்படும் என கோவில் நிர்வாகம் சார்பாக கூறப்பட்டுள்ளது.