ஓவியாவை ஒட்டுமொத்தமாக கார்னர் செய்வது ஏன்?
Send us your feedback to audioarticles@vaarta.com
கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டாராக ஓவியா கருதப்பட்டு வரும் நிலையில் இதுவரை பங்கேற்பாளர்கள் மட்டுமே ஓவியாவை கார்னர் செய்து வந்தனர். தற்போது சம்பந்தப்பட்ட டிவியே ஓவியாவை கார்னர் செய்ய ஆரம்பித்துவிட்டது ஓவியா ஆர்மியினர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஹைலைட்டே காலை எட்டு மணிக்கு ஒலிக்கப்படும் பாடலுக்கு ஓவியா ஆடும் டான்ஸ்தான். ஆனால் நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா டான்ஸ் ஆடுவது இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டது. மேலும் ஓவியா கொடுக்கப்பட்ட பைத்தியக்காரத்தனமான டாஸ்க்கை முழுமையாக செய்யவில்லை என்று கன்பெஃகஷன் அறைக்கு அழைத்து அவருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
ஓவியா அதற்கு எல்லோருக்கும் ஒரே நேரத்திலா பசிக்கும். மற்றவர்கள் டாஸ்க்கை செய்கிறார்கள் என்னால் செய்ய முடியவில்லை என்று அசால்ட்டாக கூறி வெளியேறுகிறார். நேற்று நடத்தப்பட்ட மியூசிக்கல் சேர் விளையாட்டிலும் ஓவியாவின் காட்சிகள் எடிட் செய்யப்பட்டது. மேலும் நேற்றைய நிகழ்ச்சி முழுவதுமே ஓவியாவை கிட்டத்தட்ட அனைவரும் குறை சொல்வது போன்ற காட்சிகளே உள்ளது, புதியதாக வந்த பிந்துமாதவியும் இதற்கு விலக்கு அல்ல. கடைசியில் நிகழ்ச்சி முடியும்போதும் ஓவியாவின் இந்த திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம்? என்ற கேள்விக்குறியோடு முடித்துள்ளது.
ஓவியா மக்கள் மனதில் ஸ்ட்ராங்காக உட்கார்ந்துவிட்டார். நீங்கள் என்னதான் ரூம்போட்டு யோசித்து செயல்பட்டாலும் அவருக்கு கெட்ட பெயரை உண்டாக்க முடியாது என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com