close
Choose your channels

'கூலி' ரூ.1000 கோடி வசூல் செய்யும்.. ரஜினியை விமர்சனம் செய்தவரின் பதிவால் பரபரப்பு..!

Tuesday, April 23, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘கூலி’ படத்தின் வீடியோ நேற்று வெளியான நிலையில் இந்த படத்துக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினியை விமர்சனம் செய்த இயக்குனர் இந்த படம் 1000 கோடி ரூபாய் வசூல் செய்யும் என்று கூறியுள்ளார். இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ’லியோ’ திரைப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய இயக்குனர் ரத்னகுமார் ’கழுகு என்னதான் உயர பறந்தாலும், பசிச்சா இறை தேட கீழே இறங்கிதான் வரவேண்டும்’ என்று ரஜினியை மறைமுகமாக தாக்கி பேசினார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் லோகேஷ் கனகராஜே அவருடைய பேச்சை ரசிக்கவில்லை என்றும் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கவிருக்கும் நிலையில் ரத்னகுமார் பேசியது அவருக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ரஜினி - லோகேஷ் இணையும் படத்தில் ரத்னகுமார் பணிபுரிய மாட்டார் என்று செய்திகள் வெளியான நிலையில் அவருக்கு பதிலாக வேறு ஒருவரை உதவியாளராக லோகேஷ் நியமனம் செய்யப்பட்டு விட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் நேற்று ‘கூலி’ படத்தின் வீடியோ வெளியான நிலையில் அந்த வீடியோவுக்கு தனது வாழ்த்துக்களை ரத்னகுமார் கூறியுள்ளார். மேலும் இந்த படம் நிச்சயம் நான்கு டிஜிட் பாக்ஸ் ஆபீஸ் நம்பர் வசூல் செய்யும் என்று கூறியுள்ளார். 4 டிஜிட் என்றால் குறைந்தது 1000 கோடி ரூபாய் வசூல் செய்யும் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment