'கூலி' படத்தின் ரஜினி போஸ்டரில் உள்ள 1421 எண்ணிற்கு இதுதான் அர்த்தமா? பரபரப்பு தகவல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் ’கூலி’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் நடித்து வரும் நட்சத்திரங்களின் கேரக்டர் அறிமுக போஸ்டர்கள் வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் ரஜினியின் கேரக்டர் இந்த படத்தில் ’தேவா’ என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த கேரக்டர் போஸ்டரில் 1421 என்ற எண் இருந்தது பலரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த எண்ணிற்கு என்ன அர்த்தம் என்று பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில் தற்போது இது குறித்த தகவல் கசிந்துள்ளது.
’கூலி’ திரைப்படம் தங்க கடத்தலை மையமாக கொண்டு உருவாகி வரும் நிலையில் இந்த 1421 என்ற எண்ணிற்கும், 14 கேரட் தங்கம் மற்றும் 21 கேரட் தங்கத்தின் தரத்திற்கும் சம்பந்தம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தியா உட்பட சில நாடுகளில் 14 கேரட் தங்கம் அதிகமாக பயன்படுத்தப்படும். அதேபோல் அரபு நாடுகளில் 21 கேரட் தங்கம் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தங்கத்தின் கேரட்டை குறிப்பது தான் 1421 என்றும் இந்தியா மற்றும் அரபு நாடுகளில் தங்கத்தை கடத்துவதற்கு ரகசிய எண்ணாக 1421 என்ற எண் பயன்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே ’கூலி’ படத்தின் அறிவிப்பு வீடியோவில் தங்க கட்டிகள், தங்கத்தால் செய்யப்பட்ட ஆபரணங்கள் ஆகியவை இருந்த நிலையில் இந்த படம் தங்கக் கடத்தல் மையமாக கொண்டு உருவாகி வருவதாக கூறப்படும் நிலையில் இந்த எண்ணும் தங்கத்தின் சம்பந்தப்பட்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது படம் வெளி வந்தால் மட்டுமே தெரியும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments