என் பொண்டாட்டி திட்ட போறா.. வீட்டிற்குள் வந்ததும் கூல் சுரேஷ் செய்த செயல்..!

  • IndiaGlitz, [Wednesday,January 10 2024]

பிக் பாஸ் வீட்டிற்குள் ஏற்கனவே எலிமினேஷன் செய்யப்பட்ட போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வந்து கொண்டிருக்கும் நிலையில் இன்றைய இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் கூல் சுரேஷ் வரும் காட்சிகள் உள்ளன.

அவர் வீட்டுக்குள் வந்ததும் பெண் போட்டியாளர்களான மாயா, அனன்யா, வினுஷா உள்பட எல்லோரையும் அலேக்காக தூக்கி கட்டிப்பிடிக்கிறார். குறிப்பாக வினுஷாவை தூக்கும்போது ’என் பொண்டாட்டி திட்ட போற’ என்று கூறிக் கொண்டே தூங்கியது அடுத்து அனைத்து போட்டியாளர்களும் சிரித்து மகிழ்கின்றனர்.

இதனை அடுத்து விஷ்ணு மற்றும் மணியிடம் பேசிய கூல் சுரேஷ் ’நான் நினைச்ச மாதிரியே நீங்க மூணு பேரும் இருக்கீங்களேடா’ என்று கூற, ‘நீங்க இருந்திங்கன்னா தான ஃபயர், நீங்க இல்லாம ஒரு மாதிரியாக இருக்கு என்று விஷ்ணு சொல்ல ’மற்ற யாருமே எங்கள் பக்கம் வரவே மாட்டேங்கிறாங்க’ என்று மணி புலம்புகிறார். உடனே கூல் சுரேஷ் இன்னும் ’ஏ’ டீம், ‘பி’ டீம் என்று தான் இருக்கீங்க என சொல்ல, ஆமா அப்படித்தான் இருக்கிறோம் என்று புலம்பலுடன் இருவரும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்னும் ஜோவிகா, விசித்ரா, பவா செல்லத்துரை, பூர்ணிமா ஆகியோர் வருகை தரவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.