எல்லாரும் அவங்க அவங்க குரூப்ல போய் சேர்ந்துக்கொங்க.. வீட்டுக்கு வந்தவர்களை கலாய்த்த கூல் சுரேஷ்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சியில் எலிமினேஷன் ஆன போட்டியாளர்கள் கடைசி வாரத்தில் வந்து கொண்டிருக்கும் நிலையில் அனைத்து போட்டியாளர்களும் வருகை தந்து விட்டார்கள். இன்று விசித்ரா, விஜய் வர்மா மற்றும் நிக்சன் ஆகியோர் வந்துவிட்ட நிலையில் பவா செல்லத்துரை தவிர அனைத்து போட்டியாளர்களும் தற்போது வீட்டில் உள்ளனர்.
இன்றைய முதல் புரமோ வீடியோவில் எல்லோரும் வீட்டுக்கு வந்த பிறகு கூல் சுரேஷ் அசால்டாக ’அந்தந்த குரூப் எல்லாம் தனித்தனியாக போய்க்கொங்க’ என்று கலாய்க்கிறார். பொதுவாக வீட்டுக்கு வரும் எலிமினேஷன் ஆன போட்டியாளர்கள் ஏற்கனவே தாங்கள் இருந்த குரூப்பில் தான் சேர்ந்து கொண்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முதல் புரமோ வீடியோவில் விசித்ரா வீட்டுக்கு வந்தவுடன் மாயாவை கட்டி பிடித்து கொண்டு ’நான் வெளியே ஒன்றை சாதித்திருக்கிறேன்’ என்று கூற, ’வெற்றி பெற்று வந்திருக்கிறீர்களா’ என மாயா சந்தோசத்துடன் கூறுகிறார்
இதனை அடுத்து ஆர்ஜே பிராவோ ’என்ன பத்தி மீம் போட்டிங்களாடா, ஓட்டு போட்டிங்களா’ என்று ஆதங்கத்துடன் கேட்கிறார். மேலும் நிக்சன் தனது குரூப்பில் உள்ளவர்களுடன் ’நான் இங்கே செய்தது 30, 40 சதவிகிதம் தான் ஆனால் வெளியே என்னை 100% பிளாஸ்ட் பண்ணி இருக்கிறார்கள் என்று தற்பெருமை பேசுகிறார்.
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்கள் தங்கள் தவறை உணர்ந்தது போல் தெரியவில்லை. தாங்கள் குரூப்பாக இருந்து விளையாடியது தப்பு என்பதையும் உணரவில்லை. ஆனால் வெளியே போய் தங்களுக்கு ஏதோ பெரிய பேரும் புகழும் கிடைத்துவிட்டது போல் பில்டப் செய்து கொண்டிருக்கிறார்கள்.
மொத்தத்தில் இந்த சீசனில் உள்ள போட்டியாளர்கள் போட்டியை புரிந்து கொள்ளாமல் ஒரு கனவு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வரும் பார்வையாளர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com