தமிழக வெற்றி கழகத்துடன் என்னுடைய சிஎஸ்கே கட்சி கூட்டணி வைக்கும்.. காமெடி நடிகர் பேட்டி..!

  • IndiaGlitz, [Sunday,July 14 2024]

விஜய்யின் தமிழக வெற்றி கழகத்துடன் என்னுடைய சிஎஸ்கே கட்சி கூட்டணி வைத்து 2026 ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடிக்கும் என காமெடி நடிகர் ஒருவர் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது அரசியல் கட்சி ஆரம்பிப்பதே ஒரு காமெடியாக இருக்கும் நிலையில் காமெடி நடிகர் கூல் சுரேஷ் ஒரு புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்க இருப்பதாகவும் அந்த கட்சிக்கு கூல் சுரேஷ் கட்சி என்றும் அதாவது சிஎஸ்கே கட்சி என்று பெயர் வைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தன்னுடைய கட்சி விஜய்யின் தமிழக வெற்றி கழகம் கட்சி உடன் கூட்டணி வைக்கும் என்றும் 2026 ஆம் ஆண்டு நாங்கள் ஆட்சியைப் பிடித்து மக்களுக்கு நல்லது செய்வோம் என்றும் அவர் என்று அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும் கட்சி ஆரம்பிப்பதற்கான பணிகள் தொடங்கிவிட்டது என்றும் விரைவில் அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் கூல் சுரேஷ் நண்பர்கள் நற்பணி மன்றம் தற்போது பல உதவிகள் செய்து கொண்டிருக்கும் நிலையில் அது விரைவில் அரசியல் கட்சியாக மாற இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

எனக்கு கட்சி ஆரம்பித்து தான் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை, இருப்பினும் கட்சி ஆரம்பித்து அரசாங்கம் மூலம் செய்தால் இன்னும் நிறைய பேருக்கு உதவி செய்யலாம் என்ற எண்ணத்தில் தான் கட்சி ஆரம்பிக்க உள்ளேன் என்று கூல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

சிஎஸ்கே கட்சியுடன் எந்த கட்சி கூட்டணி வைக்கின்றதோ, அந்த கட்சி தான் கண்டிப்பாக ஆட்சி அமைக்கும், எனக்கு முதலமைச்சர் ஆகும் ஆசையெல்லாம் கிடையாது, எந்த கட்சி மக்களுக்கு நல்லது செய்கிறதோ அந்த கட்சியுடன் நான் கூட்டணி வைப்பேன் என்றும் கூல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.