இதை கூட செய்யலேன்னா, உங்களுக்கு கண்ணகி பக்கத்துல சிலையா வைக்க முடியும்: கூல் சுரேஷ்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் இதை கூட செய்யவில்லை என்றால் உங்களுக்கு கண்ணகி சிலை பக்கத்தில் சிலையா வைக்க முடியும் என கூல் சுரேஷ் மிகவும் வருத்தமாக கூறிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்த வாரம் மாயா கேப்டன் ஆனதில் இருந்தே அவருக்கு நெருக்கமானவர்கள் சற்று ஓவராகவே ஆட்டம் போட்டு வருகிறார்கள். குறிப்பாக இத்தனை நாட்கள் போட்டியாளர்கள் தாங்கள் சாப்பிட்ட தட்டை கழுவி வந்த நிலையில் மாயா கேப்டன்ஷிப் வந்த நாளிலிருந்து அவர்கள் தட்டை கழுவாமல் வைத்து விடுகிறார்கள்.
இதுகுறித்து கூல் சுரேஷ் பிக் பாஸ் இடம் புகார் அளித்துள்ளார். மாயா கேப்டன் ஆக வந்ததிலிருந்து ஒரு ஐந்து ஆறு பேர்கள் மட்டும் சாப்பிட்ட தட்டை கழுவுவதில்லை. நாங்கள் அந்த தட்டை கழுவுவதால் குறைந்து போக மாட்டோம் ஆனால் அதே நேரத்தில் இந்த மனிதாபிமானம் கூட இல்லாமல் இருக்கிறார்களே, இதை கூட செய்யாதவர்கள் வெளியே போனால் அவர்களுக்கு என்ன கண்ணகி சிலையாக சிலையாக வைக்க முடியும் என்று கூறினார்
கூல் சுரேஷ் மிகவும் வருத்தத்துடன் கூறிய இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
#Maya Captancy la Olunga Plate Wash Panrathu illa#BiggBoss7Tamil #BiggBossTamilSeason7 #BiggbossTamil7 #BiggBossTamilpic.twitter.com/05bqwnhs3M
— BBTamilVideos (@BBTamilVideos) November 8, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com