'கோட்' படம் பார்க்க ஆட்டுக்குட்டியுடன் வந்த கூல் சுரேஷ்.. வேற லெவல் விளக்கம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ’கோட்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகி இருக்கும் நிலையில் சமூக வலைதளங்களில் இந்த படத்தை பார்த்தவர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து வருகின்றனர். இந்த படம் விஜய் ரசிகர்களுக்கு மட்டுமின்றி ஃபேமிலியாக சென்று பார்க்கும் வகையில் ஒரு என்டர்டைன்மென்ட் படமாக உள்ளது என்று படம் பார்த்தவர்கள் சமூக வலதங்களில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ரசிகர்கள் மட்டுமின்றி திரை உலக பிரபலங்களும் இன்றைய முதல் நாள் முதல் காட்சியை பார்த்து வரும் நிலையில் அவர்களுடைய விமர்சனமும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் காமெடி நடிகர் மற்றும் பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான கூல் சுரேஷ், ’கோட்’ திரைப்படம் பார்க்க தனது ஆதரவாளர்களுடன் தியேட்டருக்கு வந்தார். அப்போது அவர் கையில் ஆட்டுக்குட்டியை வைத்திருந்த நிலையில் அதற்கு அவர் கூறிய விளக்கம் வேற லெவலில் இருந்தது.
’கோட்’ என்பது ஆங்கில வார்த்தை என்றால் தமிழில் அதற்கு ஆடு என்ற ஒரு வார்த்தை உள்ளது என்று கூறிய கூல் சுரேஷ், ‘தமிழகத்தில் மட்டும் தான் ஒன்பது மணிக்கு காட்சி ஆரம்பிக்கிறது, மற்ற மாநிலங்களில் நான்கு மணி ஐந்து மணிக்கே காட்சி ஆரம்பித்துவிட்டது, விஜய் சார் படத்திற்கு மட்டும் ஏன் பாரபட்சம் என்று ஆவேசமாக பேசினார்.
இதனை அடுத்து அவர் ’தளபதி நடித்த படம் கோட்.. 2026ல் போடுங்க ஓட்டு’ என்று அவர் கூறிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Cool Suresh in Goat Movie FDFS 😇📷#goat #GOATTheMovie #goatfdfs #CoolSuresh pic.twitter.com/Xc1MgvpKiF
— Saravanan95 (@Saravanan_957) September 5, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments