நான் வருவேன்னு எதிர்பார்க்கலைல்ல... 'குக் வித் கோமாளி' சீசன் 5 மாஸ் புரமோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் ஒளிபரப்பான ’குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சி நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில் ஐந்தாவது சீசன் வருமா? என்ற சந்தேகம் ஏற்பட்டது. ஏனெனில் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் நடுவர்களில் ஒருவரான வெங்கடேஷ் பட் ஆகியோர் திடீரென விலகியதை அடுத்து இந்த நிகழ்ச்சி கேள்விக்குறியானது.
ஆனால் விஜய் டிவி தரப்பில் கண்டிப்பாக ’குக் வித் கோமாளி’ சீசன் 5 ஒளிபரப்பாகும் என்றும் விரைவில் புரமோ வீடியோ வெளியாகும் என்றும் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் சற்று முன் புரமோ வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
’எதிர்பார்க்கலைல, நான் வருவேன்னு எதிர்பார்க்கலைல்ல’ என்ற வசனத்துடன் செஃப் தாமு விமானத்தில் இருந்து இறங்கும் காட்சியும், அவரை தொடர்ந்து அவரது பாட்னர் மாதம்பட்டி ரங்கராஜ் விமானத்தில் இருந்து இறங்கும் காட்சியும் புரமோ வீடியோவில் உள்ளன. இதனை அடுத்து ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் இவர்கள் இருவரும் தான் நடுவர்கள் என்று ஒரு உறுதி செய்யப்பட்டுள்ளது.
விஜய் டிவியில் விரைவில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் குக்குகள் மற்றும் கோமாளிகளின் தேர்வு நடைபெற்று வருவதாகவும், இதுகுறித்த தகவல்கள் அடுத்த வீடியோவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மொத்தத்தில் ’குக் வித் கோமாளி’ அடுத்த சீசன் வருமா என்ற சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள இந்த புரமோவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com