பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் 'குக் வித் கோமாளி' போட்டியாளர்கள்?

  • IndiaGlitz, [Saturday,March 20 2021]

‘குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி வைக்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு என்பது தெரிந்ததே. ‘குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரேகா, ரம்யா பாண்டியன் மற்றும் அறந்தாங்கி நிஷா ஆகிய மூவரும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதேபோல் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வனிதா, பிக்பாஸ் சீசன் 3இல் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது ‘குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சீசன் 2 சென்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த சீசனில் கலந்து கொண்டிருக்கும் இரண்டு ‘குக்’கள் பிக்பாஸ் சீசன் 5ல் கலந்து கொள்ள வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் அரையிறுதிப் போட்டி வரை வந்திருக்கும் கனி மற்றும், சமீபத்தில் எலிமினேட் ஆன பவித்ரா ஆகிய இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 5ல் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. கனியின் சகோதரி விஜயலட்சுமி ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர் என்பது தெரிந்ததே.

அதேபோல் கோமாளிகளில் ஒரிருவர் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ஏற்கனவே நடிகர் நகுல் கலந்து கொள்வதற்காக பேச்சுவார்த்தையில் உள்ளார் என்பது தெரிந்தது

More News

நாளை களமிறங்கும் நட்சத்திர பேச்சாளர்கள்...! மாஸ் காட்டும் அதிமுக...!

ஏப்ரலில்  நடக்கவிருக்கும்  சட்டமன்ற தேர்தலுக்காக, நாளை தமிழகம் முழுவதும் அதிமுக சார்பாக

37- சீட் கொடுத்தும், போட்டியிடாத சரத்...! என்ன தான் ஆச்சு சமக-வுக்கு..?

சமத்துவ மக்கள் கட்சி-யின் சார்பாக இந்த சட்டமன்ற தேர்தலில், தலைவர் சரத்குமார் போட்டியிடாதது அக்கட்சியினர்

கமல்ஹாசனுக்கு எதிராக தெருத்தெருவாக பிரச்சாரம் செய்யும் கலா மாஸ்டர்! வைரல் புகைப்படங்கள்!

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் அரசியல் கட்சியைத் தொடங்கி முதல் முதலாக தேர்தல் களத்தில் இறங்கி உள்ளார். அவர் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார் என்பதும் அவரை எதிர்த்து பாஜக பிரமுகர்

பாண்டியன் ஸ்டோர்ஸ் புதிய முல்லை செய்த வேலை: அதிர்ச்சியில் ரசிகர்கள்

சின்னத்திரை சித்ரா நடித்து வந்த தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் என்பதும் இந்த தொடர் மிகப்பெரிய வரவேற்பை பெற்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நிலையில் திடீரென சித்ரா எதிர்பாராதவிதமாக

கண்ணாடி முன் ஹாட் கிளாமருடன் கொடுத்த போஸ்: லெஜண்ட் சரவணன் நாயகியின் வைரல் போட்டோஷூட்

சென்னை சரவணா ஸ்டோர் உரிமையாளர் லெஜெண்ட் சரவணன் அவர்கள் தமிழ் திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார் என்பதும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தப் படத்தில் நாயகியாக ஊர்வசி ரௌட்டாலா