'குக் வித் கோமாளி' சீசன் 3 வைல்ட் கார்ட் வெற்றியாளர்கள் இந்த இருவர் தான்!
Send us your feedback to audioarticles@vaarta.com
’குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி கடந்த சில மாதங்களாக நடந்துவரும் நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய வரவேற்பு பார்வையாளர்கள் மத்தியில் கிடைத்துள்ளது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் ’குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிய நிலையில் கடந்த வாரம் வைல்ட்கார்டு போட்டியாளர்களில் இருவர் இறுதிப்போட்டிக்கு தேர்வு செய்யப்படும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியிலில் எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்களில் மனோபாலா மற்றும் அந்தோணி தாஸ் தவிர மற்ற அனைவரும் கலந்துகொண்டனர். கிரேஸ் கருணாஸ், சந்தோஷ் பிரதாப், ரோஷினி, ராகுல் தாத்தா மற்றும் சுட்டி அரவிந்த் ஆகிய ஐந்து போட்டியாளர்கள் வைல்ட்கார்டில் கலந்து கொண்ட நிலையில் இவர்களில் இரண்டு போட்டியாளர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவர்கள் சந்தோஷ் மற்றும் கிரேஸ் கருணாஸ் ஆகியோர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு ஸ்ருதி, அம்மு அபிராமி, தர்ஷன் மற்றும் வித்யுலேகா ஆகியோர் தகுதி பெற்றிருந்த நிலையில் தற்போது சந்தோஷ் பிரதாப் மற்றும் கிரேஸ் கருணாஸ் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர். இந்த 6 போட்டியாளர்கள் இறுதி போட்டியில் பங்கேற்க உள்ளனர் என்பதால், இறுதிப் போட்டியில் சிறப்பாக சமையல் செய்து டைட்டில் வெல்லும் போட்டியாளர் யார் என்பதை அடுத்த ஞாயிறு வரை பொறுத்திருந்து பார்ப்போம். இருப்பினும் சமூக வலைதளங்களில் கசிந்த தகவலின்படி வித்யூலேகா தான் டைட்டில் வின்னர் என்று கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com