யாரும் எதிர்பாராத டிவிஸ்ட்.. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இணைந்த குக் வித் கோமாளி ஸ்ருதிகா..!

  • IndiaGlitz, [Monday,October 07 2024]

விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நேற்று தொடங்கியது. இந்நிலையில், நேற்று தான் ஹிந்தி பிக் பாஸ் சீசன் 18 தொடங்கியது என்பதும், இந்த நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஸ்ருதிகா இணைந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

ஹிந்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை 17 சீசன்கள் முடிவடைந்த நிலையில், நேற்று பதினெட்டாவது சீசன் தொடங்கியது. சல்மான் கான் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய தினம் 18 போட்டியாளர்கள் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவர் ஸ்ருதிகா என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல நகைச்சுவை நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தியான ஸ்ருதிகா, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் பட்டம் வென்றுள்ளார். தற்போது அவர் பிக் பாஸ் ஹிந்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

மேலும், சல்மான் கான் இடம் ஸ்ருதிகா பேசுவதும், அவரது காலில் விழுந்து ஆசி வாங்கும் காட்சியும் உள்ளது. அதுமட்டுமின்றி, சக போட்டியாளர்களிடம் சில திரைப்படங்களில் நடித்ததாகவும், அனைத்து படங்களும் சூப்பர் பிளாப் என்கிற காமெடியாக ஸ்ருதிகா கூறிய காட்சியின் வீடியோக்களும் இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

பிக் பாஸ் 18 நிகழ்ச்சியின் கலகலப்பான ஒரே போட்டியாளர் ஸ்ருதிகா என்று கூறப்படுகிறது. அவர் எத்தனை நாள் தாக்குப் பிடிப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

More News

என் பெட்-ஐ உங்களுக்கு கொடுத்துடறேன்.. 4 வாரம் நாமினேஷன் பண்ணாதிங்க: பேரம் பேசிய ஜாக்குலின்..!

பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்று 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில், முதல் நாளே ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கும் இடத்தில் பிரச்சனை ஏற்பட்டது, ஜாக்குலின் புலம்பல்

ஹை ஸ்பீடில் கார்த்திக் சுப்புராஜ்.. 'சூர்யா 44' படம் குறித்த ஆச்சரிய தகவல்..!

சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'சூர்யா 44' படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பெயின் தெருவில் ஜாலி வாக்கிங் செய்த அஜித் - ஷாலினி.. ரொமான்ஸ் வீடியோ..!

நடிகர் அஜித் தற்போது படப்பிடிப்புக்காக ஸ்பெயின் நாட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கு, ஸ்பெயின் தெருக்களில், அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினி நடந்து செல்லும் செல்பி வீடியோ தற்போது இணையத்தில்

வந்த அடுத்த நாளே வெளியேறும் போட்டியாளர்.. இன்று எலிமினேஷன் ஆவது யார்?

விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி நேற்று தொடங்கிய நிலையில், இன்று ஒருவர் எலிமினேஷன் ஆகப் போவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வந்த முதல் நாளே கன்ஃபெக்சன் ரூம்.. அலறிய போட்டியாளர்..!

பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்று தான் தொடங்கிய நிலையில், முதல் நாளே தன்னை கன்ஃபெக்சன் அறைக்கு அழைத்து பேசுங்கள் என்று போட்டியாளர் ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.