குக் வித் கோமாளி ஸ்ருதிகாவின் பள்ளித்தோழி இந்த பிரபலமா?  சின்ன வயதில் செய்த அட்டகாசங்கள்..!

  • IndiaGlitz, [Sunday,April 28 2024]

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டில் வின்னர் பெற்றவர் ஸ்ருதிகா என்பதும், இவர் மறைந்த நகைச்சுவை நடிகர் தேங்காய் சீனிவாசன் பேத்தி என்பது பலரும் அறிந்ததே. இவர் சூர்யாவுடன் ’ஸ்ரீ ’மாதவனுடன் ’நள தமயந்தி’, ஜீவாவுடன் ’தித்திக்குதே’ உள்பட சில படங்களில் நடித்திருந்தார் என்பதும் அதேபோல் சில தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் பிரபலமான நிலையில் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபாலோயர்கள் அதிகரித்தனர் என்பதும் ஒரு மில்லியனுக்கு அதிகமான ஃபாலோயர்கள் வைத்துள்ள நிலையில் அவ்வப்போது ஷாப்பிங் செல்வது, கணவர் மகனுடன் சேட்டை செய்வது உள்பட சில வீடியோக்களை பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இவருடைய பள்ளி தோழிதான் பாக்யராஜ் மகன் சாந்தனுவின் மனைவி கிகி விஜய் மனைவி என்பது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு கிகி விஜய் மற்றும் ஸ்ருதிகா சந்தித்த வீடியோ அவர்களது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த நிலையில் சின்ன வயதில் பள்ளி காலத்தில் அவர்கள் செய்த சேட்டைகள், அட்டகாசங்கள் ஆகியவற்றை இருவரும் தங்கள் மலரும் நினைவுகளாக பதிவு செய்துள்ளனர்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் ’சின்ன வயதில் நீங்களா இப்படி அட்டகாசம் செய்தீர்கள்’ என்று பலர் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.