குடும்பத்துடன் ரிஷிகேஷ் சென்ற 'குக் வித் கோமாளி' டைட்டில் வின்னர்.. வைரல் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Tuesday,September 26 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் இமயமலை சென்று ரிஷிகேஷ் உள்பட பல இடங்களில் தியானம் செய்த நிலையில் அவரை அடுத்து தமிழ் நடிகைகள் சிலர் இமயமலை சென்றனர் என்பதை பார்த்தோம்.

குறிப்பாக நடிகைகள் ரம்யா பாண்டியன் மற்றும் ஆத்மிகா இமயமலை மற்றும் ரிஷிகேஷ் சென்றனர் என்பதும் இதில் நடிகை ஆத்மிகா பாபாஜி குகையில் தியானம் செய்த புகைப்படம் வைரலானது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் தற்போது ’குக் வித் கோமாளி டைட்டில் வின்னரும் இமயமலை சென்றுள்ளார்.



விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனின் டைட்டில் வின்னர் ஸ்ருதிகா. இவர் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் தேங்காய் சீனிவாசன் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது



ஸ்ருதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவர் மற்றும் மகனுடன் ரிஷிகேஷ் சென்ற புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். மேலும் இந்த ஆன்மீக பயணம் தனக்கு மிகவும் திருப்தியாக இருந்ததாகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



ரிஷிகேஷில் உள்ள பல இடங்களில் உள்ள புகைப்படங்களை அவர் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

More News

ஜிவி பிரகாஷின் பட இயக்குனருக்கு திருமணம்.. திரையுலகினர் வாழ்த்து..!

சமீபத்தில் ஜிவி பிரகாஷ் மற்றும் கௌரி கிஷான் நடிப்பில் உருவான 'அடியே' என்ற படத்தை இயக்கிய இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த திருமணத்தில் திரையுலக பிரபலங்கள்

கமல்ஹாசனின் 'விஸ்வரூபம் 2' பட நடிகைக்கு தாதா சாகேப் பால்கே விருது.. குவியும் வாழ்த்துக்கள்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விஸ்வரூபம் 2' படம் உட்பட ஏராளமான படங்களில் நடித்த நடிகைக்கு தாதா சாகேப்  பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  

'சந்திரமுகி 3' படம் உருவாகிறதா? நாயகன் ரஜினியா? ராகவா லாரன்ஸா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'சந்திரமுகி' திரைப்படம் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் வரும் 28ஆம் தேதி 'சந்திரமுகி 2' வெளியாக உள்ளது.

ஜேசன் சஞ்சய் முதல் படத்தின் இசையமைப்பாளர் இந்த பிரபலமா? பேச்சுவார்த்தை மும்முரம்..!

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்  இயக்கும் முதல் திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாக

17 லட்சத்தை தூக்கி எறிந்த ரோகிணி .. வளையலால் மீண்டும் சிக்கிய விஜயா.. விறுவிறுப்பில் 'சிறகடிக்க ஆசை'

வீட்டு பத்திரத்தை வைத்து 17 லட்சம் ரூபாய் வட்டிக்கு வாங்கிய பணத்தை, குடும்பத்தினர் முன்னிலையில் ரோகிணி தூக்கி எறிய அப்போது அந்த பணத்தை பைனான்சியரிடம் கொடுக்கச் சென்றபோது