குடும்பத்துடன் ரிஷிகேஷ் சென்ற 'குக் வித் கோமாளி' டைட்டில் வின்னர்.. வைரல் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Tuesday,September 26 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் இமயமலை சென்று ரிஷிகேஷ் உள்பட பல இடங்களில் தியானம் செய்த நிலையில் அவரை அடுத்து தமிழ் நடிகைகள் சிலர் இமயமலை சென்றனர் என்பதை பார்த்தோம்.

குறிப்பாக நடிகைகள் ரம்யா பாண்டியன் மற்றும் ஆத்மிகா இமயமலை மற்றும் ரிஷிகேஷ் சென்றனர் என்பதும் இதில் நடிகை ஆத்மிகா பாபாஜி குகையில் தியானம் செய்த புகைப்படம் வைரலானது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் தற்போது ’குக் வித் கோமாளி டைட்டில் வின்னரும் இமயமலை சென்றுள்ளார்.



விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனின் டைட்டில் வின்னர் ஸ்ருதிகா. இவர் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் தேங்காய் சீனிவாசன் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது



ஸ்ருதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவர் மற்றும் மகனுடன் ரிஷிகேஷ் சென்ற புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். மேலும் இந்த ஆன்மீக பயணம் தனக்கு மிகவும் திருப்தியாக இருந்ததாகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



ரிஷிகேஷில் உள்ள பல இடங்களில் உள்ள புகைப்படங்களை அவர் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.