'பத்தல பத்தல' பாடலுக்கு 'குக் வித் கோமாளி' ஸ்ருதிகா-வித்யூலேகா என்ன செஞ்சுருக்கா பாருங்க!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ படத்தில் இடம்பெற்ற ’பத்தல பத்தல’ என்ற பாடலுக்கு ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களான ஸ்ருதிகா மற்றும் வித்யூலேகா செய்த செயல் குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற 'பத்தல பத்தல’ என்ற பாடல் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. கமல்ஹாசன் எழுதி பாடிய இந்த பாடலை அனிருத்தும் இணைந்து பாடியுள்ளார். இந்த பாடலின் போது திரையரங்குகளில் ரசிகர்கள் எழுந்து ஆடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த பாடலுக்கேற்ப குக் வித் கோமாளி போட்டியாளர்களான ஸ்ருதிகா மற்றும் வித்யூலேகா ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த பாடலின் தாளத்திற்கு ஏற்ப இவர்கள் இருவரும் உடற்பயிற்சி செய்யும் இந்த வீடியோவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.