குறை சொல்ல ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்: ஷிவாங்கியின் ஆதங்கத்திற்கு காரணம் என்ன?
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் குறிப்பாக இந்த நிகழ்ச்சியின் செல்லப்பிள்ளை என்று கூறப்படும் ஷிவாங்கியின் நான்ஸ்டாப் காமெடிக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஷிவாங்கி தனது டுவிட்டர் பக்கத்தில் ’நீங்கள் என்னதான் நல்லது செய்தாலும் ஒருசிலர் ஏதாவது குறை சொல்லிக்கொண்டே இருப்பார்கள் என்றும் அதுதான் வாழ்க்கை’ என்றும் பதிவு செய்துள்ளார். ஷிவாங்கியின் இந்த ஆதங்கத்திற்கு என்ன காரணம் என்று கேள்வி எழுந்த நிலையில் நெட்டிசன்கள் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளனர்.
கடந்த வாரம் நடந்த குக் வித் நிகழ்ச்சியில் மதுரைமுத்து ’7 கட்டை குறித்த ஒரு காமெடியை கூறினார். அப்போது பக்கத்தில் இருந்த சரத், இவர் விளக்குமாத்து கட்டையில பாடுவார் என்று கூறினார். அதற்கு கவுண்டர் கொடுத்த ஷிவாங்கி ’தொடப்பக்கட்டய எடுத்து அடிச்சிடுவேன்’ என்று கூறினார். அப்போது மதுரை முத்துவின் முகம் சுருங்கியது. அதுமட்டுமின்றி அந்த நேரத்தில் ’எள்ளு வய பூக்கலையே’ என்ற பாடல் பிஜிஎம் ஆக போட்டதால் மதுரை முத்துவின் ரசிகர்கள் இந்த செயலால் கடுப்பாகினர்.
இதனை அடுத்து ஷிவாங்கிக்கு ஒருசிலர் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதன் காரணமாகத்தான் ஷிவாங்கி தனது டுவிட்டர் பக்கத்தில் நீங்கள் என்னதான் நல்லது செய்தாலும் ஏதாவது ஒரு குறை சொல்ல ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும் அது தான் வாழ்க்கை என்று பதிவிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் உண்மையில் ஷிவாங்கி ஒரு காமெடிக்காக தான் துடைப்பகட்ட குறித்து கூறினார் என்றும், அதனை கூறிவிட்ட அடுத்த வினாடியே அவர் தனது தவறை உணர்ந்தது அந்த நிகழ்ச்சியிலேயே தெரியும் என்றும், மதுரை முத்து காமெடியை அந்த செட்டில் உள்ள அனைவரும் கேலி செய்து கொண்டிருக்கும் நிலையில் ஷிவாங்கி மட்டும் தான் மதுரை முத்துவை ‘ என்னுடைய காமெடி குரு’ என்று கூறி பெருமைப்படுத்தியுள்ளார் என்றும் ஷிவாங்கி ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout