திருமண ஆசை வந்துவிட்டதா? குக் வித் கோமாளி ஷிவாங்கி வைரல் பதிவு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் முதலில் கோமாளியாகவும் அதன் பிறகு குக்காகவும் கலந்து கொண்ட ஷிவாங்கி தனது சமூக வலைதளத்தில் செய்த பதிவில் இருந்து அவருக்கு சினிமா திருமண ஆசை வந்துவிட்டதோ என்று ரசிகர்கள் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷிவாங்கிக்கு நல்ல பெயர் கிடைத்ததை அடுத்து அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். முதல் மூன்று சீசன்களில் கோமாளியாக கலந்து கொண்ட அவர் நான்காவது சீசனில் பயிற்சி எடுத்து வந்த குக்காக மாறினார் என்பதும் அதில் கிட்டத்தட்ட இறுதி வரை அவர் சிறப்பாக சமையல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அடுத்ததாக அவர் சினிமாவில் நடித்து வருகிறார் என்பதும் தற்போதும் அவர் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் என்பதும், அதேபோல் சினிமாவில் பாடல்களையும் பாடி வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே..
இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது சமூக வலைத்தளத்தில் செய்த பதிவுதான் அவருக்கு திருமண ஆசை வந்துவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. அந்த பதிவில் ’சமூக வலைதளங்களை திறந்தாலே யாருக்காவது திருமணம் அல்லது நிச்சயதார்த்தம் முடிந்திருக்கிறது என்பதையும், கர்ப்பமாக இருக்கிறேன் என்று பதிவிடுவதையும் பார்த்து வருகிறேன். இதெல்லாம் பார்க்கும்போது நானும் அந்த ஒரு கட்டத்தில் தான் இருக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனை பார்த்த பலர் ’சரியான நபர் கிடைத்தால் திருமணம் செய்து கொள்ளுங்கள், என்ன தப்பு என்பது உட்பட பல்வேறு கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com