close
Choose your channels

'என்ன குமுதா டிரஸ்ஸிங் சென்ஸ் மாறிகிட்டே வருது.. ஷிவாங்கியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

Thursday, February 23, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி போன்ற ரியாலிட்டி ஷோக்களில் பிரபலமான ஷிவாங்கியின் லேட்டஸ்ட் புகைப்படத்திற்கு ஏராளமான கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகின்றன.

சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் ஷிவாங்கி என்பதும் இவரது குரலுக்கு பலர் அடிமை என்பதும் தெரிந்ததே. அதன் பிறகு கடந்த மூன்று சீசன்களாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பட்டையை கிளப்பினார் என்பதும் அவரது அப்பாவித்தனமான காமெடி அனைவரையும் கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் ஷிவாங்கி போன்று தனக்கு ஒரு தங்கை இல்லையே என்று ஆதங்கப்படும் அளவிற்கு அவர் ஒவ்வொருவருக்கும் தங்கையாக கருதப்பட்டார். இந்த நிலையில் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் அவருக்கு புரமோஷன் கிடைத்தது என்பதும், தற்போது அவர் குக்காக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உள்ளார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் ஷிவாங்கிற்கு 5 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடையில் எடுத்த போட்டோ சூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகின்றன. குறிப்பாக ஒரு நெட்டிசன், ‘என்ன குமுதா ட்ரெஸ்ஸிங் சென்ஸ் மாறிக்கிட்டே வருது கொஞ்சம் கொஞ்சமா’ என பதிவு செய்துள்ளதை அடுத்து இந்த பதிவு வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment