close
Choose your channels

'குக் வித் கோமாளி' போட்டியாளர் கர்ப்பம்.. க்யூட் புகைப்படம் மூலம் அறிவிப்பு..!

Friday, March 15, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர் தான் கர்ப்பம் என்பதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் க்யூட் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி பார்வையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் விரைவில் இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை ஒளிபரப்பான நான்கு சீசன்களில் இரண்டாவது சீசன் தான் மிகச்சிறந்த சீசன் ஆக கருதப்பட்டது என்பதும் இந்த சீசனில் உள்ள போட்டியாளர்கள், கோமாளி செய்த சேட்டைகள் இன்றும் மறக்க முடியாத வகையில் இருப்பதாகத்தான் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது. குறிப்பாக பாபா பாஸ்கர், அஸ்வின், ஷகிலா தீபா ஆகிய போட்டியாளர்கள், பாலா, புகழ், ஷிவாங்கி போன்ற கோமாளிகள் நிகழ்ச்சியை கலகலப்பாக கொண்டு சென்றார்கள்.

இந்த நிலையில் ’குக் வித் கோமாளி’ இரண்டாவது சீசனில் வைல்ட் கார்டு என்ட்ரியாக வந்தவர் ‘பாக்கியலட்சுமி’ உள்பட ஒருசில சீரியல்களில் நடிகை ரித்திகா தமிழ் செல்வி என்பதும் இவர் அந்த நிகழ்ச்சியில் சில வாரங்கள் மட்டுமே இருந்தாலும் பார்வையாளர்களை மனதை கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு தொடர்ச்சியாக பாலா தான் கோமாளியாக வந்தார் என்பதும் இருவருக்கும் ஆன கெமிஸ்ட்ரி அபாரமாக இருந்ததாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு வினு என்ற தொழிலதிபரை ரித்திகா தமிழ் செல்வி திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது அவர் தான் கர்ப்பமாக இருப்பதை க்யூட் புகைப்படம் ஒன்றின் மூலம் தனது இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார். இதையடுத்து சின்னத்திரை உலகினர் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment