'சோறு தான் எல்லாமே'.. குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் பிரியங்காவின் பதிவு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் பிரியங்கா தனது சமூக வலைதளத்தில் "சோறு தான் எல்லாமே" என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "குக் வித் கோமாளி" நிகழ்ச்சி, நான்கு சீசன்கள் முடிவடைந்து, ஐந்தாவது சீசன் மாதங்களாக ஒளிபரப்பானது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் பார்க்கும் வகையில், காமெடி-குக்கிங் நிகழ்ச்சியாக இது உருவாக்கப்பட்டது. ஐந்தாவது சீசனின் ஆரம்பத்தில் சில பிரச்சினைகள் இருந்தாலும், மற்ற சீசன்களை போலவே, இது பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
அதே நேரத்தில், கடைசி நேரத்தில் பிரியங்கா மற்றும் மணிமேகலை இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், மணிமேகலை நிகழ்ச்சியில் இருந்து விலகினார். இதன் பிறகு, சமூக வலைதளங்களில் இருதரப்பு ஆதரவாளர்கள் இடையே எழுந்த கருத்து விவாதம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், குக் வித் கோமாளி சீசன் 5-ன் கிராண்ட் ஃபினாலேவில், பிரியங்கா டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். டைட்டில் பட்டம் வென்ற பிறகு பிரியங்கா தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:
டைட்டில் வின்னராக நான், கண்டிப்பாக உங்கள் அனைவரையும் மகிழ்விக்கும் வகையில் நேர்மறையான எண்ணங்களுடன் செயல்படுவேன். "சோறு தான் எல்லாமே.
என்னைச் சுற்றி பொய்கள் பரப்பப்பட்டாலும் நான் மீண்டு வந்துவிட்டேன். பத்து ஆண்டுகளுக்கு முன்பு 'கிச்சன் சூப்பர் ஸ்டார்' நிகழ்ச்சியில், சிக்கனை சரியாக கையாளாததால் தோல்வி அடைந்தேன். ஆனால், அதே விஜய் டிவியில் 10 வருடங்களுக்குப் பிறகு 'குக் வித் கோமாளி' டைட்டிலை வெல்வது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.
இப்போது என்னால் எல்லாவற்றையும் சமைக்க முடியும் என்ற தைரியம் உள்ளது. சமையல் கலை பயிற்சியில் நுணுக்கங்களை கற்றுக் கொண்டேன். சமையல் செய்த பெரும்பாலான உணவுகளை சுவைக்க முடியவில்லை என்றாலும், மற்றவர்கள் அதை ரசித்தனர்."
எனது பயிற்சியாளர்களுக்கு, என்னை ஊக்கப்படுத்திய அனைவருக்கும் நன்றி. எனது கடின உழைப்புக்கு என்னை உந்துதல் கொடுத்த என் குடும்பத்தினருக்கும், குறிப்பாக என் அம்மாவுக்கும் நன்றி. இந்தப் பயணத்தில் என்னை ஆதரித்த, கண்ணீர் சிந்திய, துணைநின்ற அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com