ராமர் மட்டுமல்ல.. இன்னும் சில புது கோமாளிகள்.. களை கட்ட போகும் 'குக் வித் கோமாளி 5'
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் கடந்த நான்கு சீசன்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் ஏப்ரல் 27ஆம் தேதி ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் விளம்பர வீடியோக்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் இருந்து நடுவர் வெங்கடேஷ் பட், இயக்குனர் பார்த்திபன் மற்றும் தயாரிப்பாளர் ஆகிய மூவரும் விலகிய நிலையில் இந்த சீசனை வெற்றிகரமாக கொண்டு வர வேண்டும் என்பதற்காக அதிகமாக செலவில் செட் போடப்பட்டு உள்ளதாகவும் மேலும் சில பிரம்மாண்டங்கள் ஆச்சரியங்கள் இந்த சீசனில் இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் ஏற்கனவே இந்த சீசனில் குக்குகளாக வடிவுக்கரசி, பிரியங்கா, ஸ்ரீகாந்த் தேவா, இர்ஃபான், சுஜிதா உள்ளிட்ட சிலர் கலந்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் கோமாளிகளாக புகழ் ,குரேசி, சுனிதா ஆகியோர்களுடன் ராமர் கோமாளியாக இணைகிறார் என்றும் கூறப்பட்டது
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல் படி ராமர் மட்டுமல்ல இன்னும் சில புதிய கோமாளிகள் வர இருப்பதாகவும் அவர்கள் கேமி, அன்ஷிதா, வினோத், ஷப்னம், நாஞ்சில் விஜயன், என்றும் கூறப்படுகிறது. மொத்தத்தில் ’குக் வித் கோமாளி சீசன் 5’ களை கட்டப் போவது உறுதி என்பது குக்குகள் மற்றும் கோமாளிகள் தேர்வில் இருந்து தெரிய வருகிறது.
Waiting laye veri aguthe..🔥 #CookuWithComali5 Stress எல்லாம் பறந்துfy..😃 #CookuWithComali5 - ஏப்ரல் 27 முதல் சனி & ஞாயிறு இரவு 9.30 மணிக்கு..நம்ம விஜய் டிவில.. #CookuWithComaliSeason5 #CookuWithComali5 #CWC #ChefDamodharan #ChefDamu pic.twitter.com/jb5cJy4rAz
— Vijay Television (@vijaytelevision) April 23, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com