6 புதிய கோமாளிகளுடன் கோலாகலமாக ஆரம்பித்த குக் வித் கோமாளி.. முதல் எபிசோட் எப்படி இருக்கு?
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் ஒளிபரப்பான ’குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சி நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில் இன்று ஐந்தாவது சீசனின் முதல் எபிசோட் வெளியாகியுள்ள நிலையில் இந்த எபிசோடு பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த சீசனில் பங்கேற்க போகும் 10 குக்குகள் குறித்த அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில் அவர்களது அறிமுகம் இன்றைய எபிசோடில் அட்டகாசமாக இருந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் குக்குகள் பின் வருமாறு:
1. திவ்யா துரைசாமி - நடிகை
2 . இர்பான் - யூடியூபர்
3. பூஜா - சூப்பர் சிங்கர் பாடகி.
4. விடிவி கணேஷ் - திரைப்பட நடிகர்
5. பிரியங்கா - விஜய் டிவி தொகுப்பாளினி
6. ஷாலினி ஜோயா - நடிகை
7. அக்சய் கமல் - சீரியல் நடிகர்
8. வசந்த் - சீரியல் நடிகர்
9. ஸ்ரீகாந்த் தேவா - இசையமைப்பாளர்
10. சுஜிதா - சீரியல் நடிகை
அதேபோல் இந்த சீசனில் புகழ், குரேஷி, சரத், சுனிதா, ராமர், கேபிஒய் வினோத், நாஞ்சில் விஜயன், அன்ஷிதா, வைஷாலி உள்ளிட்டோர் கோமாளிகளாக உள்ளனர்.
மொத்தத்தில் குக் வித் கோமாளி ஏன் இன்றைய நிகழ்ச்சி கோமாளிகள் மற்றும் குக்குகள் அறிமுகத்தோடு முடிவடைந்தது என்பதும் இந்த நிகழ்ச்சியை ரக்சன் மற்றும் மணிமேகலை தொகுத்து வழங்க நடுவர்களாக செஃப் தாமு மற்றும் செஃப் மாதம்பட்டி ரங்கராஜன் உள்ளனர். நாளை ஒளிபரப்பாகும் இரண்டாவது எபிசோடில் சமையல் போட்டிகள் என தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com