close
Choose your channels

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த பிரபல நடிகரா? 'குக் வித் கோமாளி' சீசன் 5ல் கலக்கியவர்..!

Tuesday, September 24, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் கலக்கிய பிரபல நகைச்சுவை நடிகர் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி அக்டோபர் 6ஆம் தேதி தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் கிட்டத்தட்ட உறுதிசெய்து விட்டதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்த சீசனின் போட்டியாளர்களாக தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், தொகுப்பாளர் தீபக், சீரியல் நடிகர் வினோத் 'பாரதி கண்ணம்மா' நடிகர் அருண், நகைச்சுவை நடிகர் செந்தில், வில்லன் நடிகர் மன்சூர் அலிகான், இயக்குனர்-நடிகர் ரஞ்சித் மற்றும் தொகுப்பாளர் ஜெகன், 'செல்லமா' சீரியல் நடிகை அன்சிதா, 'ஈரமான ரோஜாவே' சீரியல் நடிகை பவித்ரா, 'பாரதி கண்ணம்மா' நடிகை பரீனா, 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்ஷா குப்தா, 'மகாராஜா' திரைப்படத்தில் விஜய் சேதுபதி மகளாக நடித்த சஞ்சிதா ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது விடிவி கணேஷ் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலக்கிய இவர், தாமு மற்றும் மாதப்பட்டி ரங்கராஜ் ஆகியோர்கள் ரசிக்கும் வகையில் காமெடி செய்தவர் என்பதும் தெரிந்ததே. இந்நிலையில், பிக் பாஸ் வீட்டிற்கு விடிவி கணேஷ் சென்றால் என்ன ஆகும் என்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கணேஷ் கணேஷ் கலந்து கொள்வாரா, அவர் எந்த அளவுக்கு பார்வையாளர்களை கவரப் போகிறார் என்பதெல்லாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment