'குக் வித் கோமாளி' டைட்டில் வின்னர் இவரா? வேலையை காட்டுகிறதா விஜய் டிவி..?

  • IndiaGlitz, [Thursday,July 20 2023]

’குக் வித் கோமாளி நிகழ்ச்சி இறுதிகட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் இந்த வாரம் சனி ஞாயிறு இறுதி நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான படப்பிடிப்பு நேற்று முடிவடைந்ததாகவும் இதில் டைட்டில் பட்டம் பெற்றவர் யார் என்ற தகவல் கசிந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த வாரம் வைல்ட் கார்டு போட்டி நடைபெற்ற நிலையில் அதில் இறுதி போட்டியாளராக ஆண்ட்ரியன் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே விசித்ரா, ஸ்ருஷ்டி, மைம் கோபி, கிரன், ஷிவாங்கி ஆகிய ஐந்து இறுதி போட்டியாளர்கள் உள்ள நிலையில் தற்போது ஆறாவது போட்டியாளராக ஆண்ட்ரியன் உள்ளார்

இந்த நிலையில் நேற்று ’குக் வித் கோமாளி இறுதிப்போட்டி நடைபெற்றதாகவும் அதில் ஆண்ட்ரியன் மற்றும் ஷிவாங்கி ஆகிய இருவரில் ஒருவர் தான் டைட்டில் பட்டம் வெல்பவர் என்றும் கூறப்படுகிறது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் டைட்டில் வெல்வதற்கு தகுதியானவர் ஆண்ட்ரியன் தான் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனால் போன சீசன் வரை கோமாளியாக இருந்த ஷிவாங்கிக்கு டைட்டில் பட்டம் கொடுத்தால் கண்டிப்பாக விஜய் டிவி தனது வேலையை காட்டி விட்டதாகவே கருதப்படும் என பார்வையாளர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ‘குக் வித் கோமாளி சீசன் 4 டைட்டில் பட்டம் யாருக்கு என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

'டான்' இயக்குனர் சிபி அடுத்த படத்தின் நாயகன் இவர்தான்.. விரைவில் அறிவிப்பு..!

சிவகார்த்திகேயன் நடித்த 'டான்' டான் திரைப்படத்தை இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கியிருந்த நிலையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நூறு கோடி வசூல் செய்தது.

அரசியல் வருகை குறித்து சர்வே எடுத்தாரா விஜய்? சர்வே முடிவால் அதிரடியாக எடுத்த முடிவு..!

நடிகர் விஜய் அரசியலில் வருவது குறித்து சர்வே எடுத்ததாகவும் அந்த சர்வே முடிவால் மகிழ்ச்சி அடைந்த அவர் அதிரடியாக  முடிவு எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

தனுஷின் 'D50' படத்தின் டைட்டில் ரிலீஸ் தேதி இதுவா?

தனுஷ் சின் 50வது படத்தை அவரே நடித்து இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதையும் பார்த்தோம். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள

மூன்றே மாதத்தில் முடிகிறது விஷாலின் அடுத்த படம்.. விறுவிறுப்பான படப்பிடிப்பில் இயக்குனர்..!

விஷாலின் அடுத்த திரைப்படத்தை மூன்றே மாதங்களில் முடிக்க இயக்குனர் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காக விறுவிறுப்பாக படப்பிடிப்பை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்சேதுபதி படத்தில் சிவகார்த்திகேயன்? 'மாவீரன்' வெற்றிவிழாவில் அவரே தெரிவித்த தகவல்..!

சிவகார்த்திகேயன் நடித்த 'மாவீரன்' திரைப்படத்தில் விஜய் சேதுபதி அசரீரி குரல் கொடுத்த நிலையில் விஜய் சேதுபதியின் படத்தில் நடிக்க ஆசை என 'மாவீரன்' வெற்றி விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன்