'குக் வித் கோமாளி' இந்த வார எலிமினேஷன் இவரா? டைட்டில் வின் பண்ணுவாருன்னு நினைச்சோமே..!

  • IndiaGlitz, [Sunday,June 11 2023]

விஜய் டிவியில் கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது என்பதும் மற்ற மூன்று சீசன்கள் போலவே நான்காவது சீசனுக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த சீசனில் 10 போட்டியாளர்கள் மற்றும் இரண்டு வைல்டு கார்டு போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் இதுவரை 6 போட்டியாளர்கள் வெளியேறி உள்ளனர். மீதமுள்ள ஆறு போட்டியாளர்களில் ஷிவாங்கி ஏற்கனவே டாப் 5 என்ற அந்தஸ்தை பெற்று விட்டார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் ஆண்ட்ரினே, மைக் கோபி, ஸ்ருஷ்டி, விசித்ரா மற்றும் கிரன் ஆகிய ஐவரில் ஒருவர் இந்த வாரம் எலிமினேஷன் செய்யப்படுவார் என்ற நிலையில், கிரன் மற்றும் ஆண்ட்ரினே ஆகிய இருவரும் எலிமினேஷன் ரவுண்டுக்கு வந்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக இந்த ஆண்ட்ரினே எலிமினேஷன் செய்யப்பட்டதாக அறிவித்ததை பார்வையாளர்களால் நம்பவே முடியவில்லை.

இந்த சீசனில் டைட்டில் வின்னர் பட்டத்தை வெல்வார் என்று ஆண்ட்ரினேவை பலர் கணித்திருந்த நிலையில் அவர் இந்த வாரத்துடன் வெளியேறியது அனைவருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் வைல்கார்ட் என்ட்ரி மூலம் வந்து கண்டிப்பாக டைட்டில் பட்டத்தை நோக்கி செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

வருண்தேஜ் - லாவண்யா திரிபாதி நிச்சயதார்த்தம்.. இன்ஸ்டாவில் அழகிய புகைப்படங்கள்..!

பிரபல தெலுங்கு நடிகர் வருண் தேஜ் மற்றும் நடிகை லாவண்யா திரிபாதி ஆகிய இருவருக்கும் நிச்சயதார்த்தம் ஆகியுள்ள நிலையில் நிச்சயதார்த்த புகைப்படங்களை இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்

ஹீரோவாக டான்சிங் ரோஸ் நடிக்கும் படம்.. மோஷன் போஸ்டர் வீடியோ ரிலீஸ்..!

பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான 'சார்பாட்டா பரம்பரை' என்ற திரைப்படத்தில் டான்சிங் ரோஸ் என்ற அட்டகாசமான கேரக்டரில் நடித்த நடிகர் சபீர் ஹீரோவாக நடிக்கும் படத்தின் டைட்டில் மற்றும் மோஷன்

மூன்றாவது முறையும் அதே இடத்தில்.. சிவகார்த்திகேயனின் மாஸ் திட்டம்..!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'மாவீரன்' திரைப்படம் ஜூலை 14ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் தற்போது கசிந்து உள்ளது. 

அதே கோரமண்டல் இரயில் ..அதே இடம் வியப்பா இருக்கு - கலை இயக்குனர் பார்த்திபன்

சமீபத்தில் ஒடிசாவில்  இரயில் விபத்து ஒன்று ஏற்பட்டது இந்த விபத்தும் அன்பே சிவம் படத்தில்  காட்டப்பட்ட இரயில் விபத்தும் ஒரே மாதிரியாக இருந்தது

என் வாழ்க்கையில் இந்த ரோல்தான் ரொம்ப கஷ்டமா இருந்தது.. - ஐஸ்வர்யா ராஜேஷ்

IndiaGlitz வழங்கும் CII Dakshin 2023  நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது  .