'குக் வித் கோமாளி' இந்த வார எலிமினேஷன் இவரா? டைட்டில் வின் பண்ணுவாருன்னு நினைச்சோமே..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது என்பதும் மற்ற மூன்று சீசன்கள் போலவே நான்காவது சீசனுக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதும் தெரிந்ததே.
இந்த சீசனில் 10 போட்டியாளர்கள் மற்றும் இரண்டு வைல்டு கார்டு போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் இதுவரை 6 போட்டியாளர்கள் வெளியேறி உள்ளனர். மீதமுள்ள ஆறு போட்டியாளர்களில் ஷிவாங்கி ஏற்கனவே டாப் 5 என்ற அந்தஸ்தை பெற்று விட்டார் என்பது தெரிந்ததே
இந்த நிலையில் ஆண்ட்ரினே, மைக் கோபி, ஸ்ருஷ்டி, விசித்ரா மற்றும் கிரன் ஆகிய ஐவரில் ஒருவர் இந்த வாரம் எலிமினேஷன் செய்யப்படுவார் என்ற நிலையில், கிரன் மற்றும் ஆண்ட்ரினே ஆகிய இருவரும் எலிமினேஷன் ரவுண்டுக்கு வந்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக இந்த ஆண்ட்ரினே எலிமினேஷன் செய்யப்பட்டதாக அறிவித்ததை பார்வையாளர்களால் நம்பவே முடியவில்லை.
இந்த சீசனில் டைட்டில் வின்னர் பட்டத்தை வெல்வார் என்று ஆண்ட்ரினேவை பலர் கணித்திருந்த நிலையில் அவர் இந்த வாரத்துடன் வெளியேறியது அனைவருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் வைல்கார்ட் என்ட்ரி மூலம் வந்து கண்டிப்பாக டைட்டில் பட்டத்தை நோக்கி செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com