குக் வித் கோமாளி எலிமினேஷன் ரவுண்டில் ஷிவாங்கி.. இந்த வார வெளியேற்றம் இவரா?
Send us your feedback to audioarticles@vaarta.com
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்காவது சீசன் சனி ஞாயிறு ஆகிய இரண்டு தினங்களில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் வாரம் என்பது அனைவரும் அறிந்ததே.
குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் ஸ்ருஷ்டி டாங்கே, ஷெரின், ராஜ் அய்யப்பா, ஷிவாங்கி, விஜே விஷால், காளையன், விசித்ரா, அண்ட்ரின் நெளரிகட், கிஷோர், மைம் கோபி, ஆகிய 10 குக்குகள் கலந்து கொண்டிருந்த நிலையில் ஏற்கனவே கிஷோர், காளையன் மற்றும் ராஜ் அய்யப்பா ஆகிய மூவர் எலிமினேஷன் ஆகிவிட்டனர்
இந்த நிலையில் இந்த வார எலிமினேஷன் ரவுண்டில் சிறப்பாக சமையல் செய்யாத ஷிவாங்கி மற்றும் விஜே விஷால் ஆகிய இருவரும் சிக்கினர். இதனை அடுத்து இருவருக்கும் நடந்த போட்டியில் ஷிவாங்கி எலிமினேஷன் ரவுண்டில் இருந்து தப்பித்து விட்டதாகவும் விஷால் இந்த வார எலிமினேஷன் போட்டியாளர் என்று அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து சக போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் மிகுந்த சோகமடைந்து அவருக்கு ஆறுதல் கூறினார்.
இந்த நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் ஆன விஜே விஷால் ’நான் இதுவரை பணிபுரிந்த நிகழ்ச்சிகளிலேயே இந்த நிகழ்ச்சி தான் எனக்கு பாசிட்டிவ் உணர்வுகளை கொடுத்தது என்றும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை நான் பெருமையாக கருதுகிறேன் என்றும் தெரிவித்தார். மீண்டும் வைல்ட் கார்ட் போட்டியில் வந்து கண்டிப்பாக என்னால் முடிந்த அளவு நன்றாக சமையல் செய்வேன் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் ‘குக் வித் கோமாளி’ சீசன் 4 நிகழ்ச்சியில் இதுவரை 4 ஆண் போட்டியாளர்கள் எலிமினேஷன் ஆகியுள்ள நிலையில் மைம் கோபி மட்டுமே நிகழ்ச்சியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments