'குக் வித் கோமாளி' சீசன் 4: இந்த பிரபலம் கோமாளியா?
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி என்பதும் இதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் திரையுலகில் தற்போது ஜொலித்து வருகிறார்கள் என்பதும் தெரிந்ததே.
ஏற்கனவே 3 சீசன்கள் முடிவடைந்த நிலையில் இந்த மூன்று சீசன்களில் வனிதா,கனி மற்றும் ஸ்ருதிகா ஆகிய மூவர் டைட்டில் பட்டம் பெற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வெங்கடேஷ் பட் மற்றும் தாமு ஆகிய இரண்டு செஃப்கள் நடுவர்களாக இருக்கும் இந்த நிகழ்ச்சிக்கு ரக்சன் தொகுப்பாளராக இருந்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் மூன்று சீசன்கள் ஏற்கனவே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் நான்காவது சீசன் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இது குறித்த புரோமோ வீடியோ தற்போது விஜய் டிவியின் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியாகியுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
குக் வித் கோமாளி 4வது சீசனிலும், வெங்கடேஷ் பட் மற்றும் தாமு ஆகியோர் நடுவர்களாக இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பது ரக்சன் என்பது புரமோ வீடியோவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சீசனில் சில புதிய கோமாளிகளும் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே இருக்கும் கோமாளிகளான மணிமேகலை, சுனிதா உள்பட ஒரு சிலர் இருந்தாலும் இந்த நிகழ்ச்சியின் புதிய கோமாளியாக ஜிபி முத்து இடம் பெற்று உள்ளார் என்ற தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் திரையுலகிலும் தற்போது பிஸியாக இருக்கும் ஜிபி முத்து, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்துகொள்வதால் இதன் மூலம் கிடைக்கும் பிரபலம் காரணமாக அவர் மேலும் புகழ் அடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் பழைய கோமாளிகளான பாலா, புகழ், குரேஷி ஆகியோர்களும் இந்த நிகழ்ச்சியில் இடம்பெற வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அடுத்த தரமான Season-க்கு ரெடி ஆகுங்கள் 😃 #CookuWithComaliSeason4 #CookuWithComali4 #CWC #VijayTelevision #VijayTV pic.twitter.com/GbqGAP4rNE
— Vijay Television (@vijaytelevision) January 6, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout